காணாற்று மடையை உடைத்த ஒப்பந்தரார்! சிறு தொழில் செய்பவர்களுக்கு பிரச்சனை! ஜமாத் சார்பில் மறியல் செய்ய திட்டம்!
ம.பா.கெஜராஜ்,
வேலூர் மாவட்டம், வேலூர் சேன்பாக்கம் பகுதியில் கழிவு நீர் செல்லும் காணாற்றின் மடையை ஒப்பந்ததாரார் உடைத்துவிட்டார். இதனால் ஊரில் உள்ள சாக்கடை நீர் தொழில் புரிவோர் நிலையங்களுக்கு புகுந்து மின் மோட்டார், மரச்சமான்கள் மற்றும் உபகரணங்கள் முற்றிலுமாக சேதமட்ய்ந்துவிட்டது.
இதனால் சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், உடைத்த காணாற்று மடையை மீண்டும் கட்டி கொடுக்க வேண்டும் எனவும் ஆட்சியருக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக தமிழ்நாடு சுன்னத் ஜமாத் அமைப்பின் மாவட்ட செயலாளர் ஷெரிப்பாஷா என்பவர் ஆட்சியருக்கு தெரிவிக்கையில், தற்பொழுது பெய்த கனமழையின் காரணமாக வேலூர் சேன்பாக்கம், கிருஷ்ணா கார்டனில் உள்ள சிறு தொழில் செய்பவர்கள் அனைவரும் பெரிதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அங்குள்ள ரயில்வே கிராசிங் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது, அப்பணியை செய்பவர்கள் தண்ணீரை சிறு தொழில் செய்யும் பகுதிகளில் திறந்து விட்டிருக்கிறார்கள்.

இதனால் மின் மோட்டார் உட்பட மரச்சாமான்கள் போன்றவை முற்றிலும் சேதம் அடைந்து விட்டது. இதனால் அவர்களுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.
ஆகவே மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், தண்ணீரை திருப்பிவிட்ட பாலம் கட்டுமான ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், மடை திருப்பி விட்டிருக்கும் கால்வாயை போர்க்கால அடிப்படையில் தடுத்து, மேற்படி பாதிக்கப்பட்டுள்ள சிறு தொழில் செய்பவர்களையும் அவர்கள் வாழ்வாதாரங்களையும் காப்பாற்றும் படி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் வேலூர் மாநகரக்குட்பட்ட கன்சால்பேட்டை காந்திநகர் மற்றும் வனவாசி நகரை சேர்ந்த மக்கள் தங்கள் பகுதியில் கழிவுநீரோடு சேர்ந்த மழை நீரும் தேங்கி நிற்பதால் மிகுந்த அவதிப்பட்ட அவர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் தங்கள் பகுதியையும் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் எனக் கூறி திடீரென மாங்காய் மண்டியில் பழைய பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்துக் கொண்டனர்.
இந்நிலையில் மாநகருக்கு உட்பட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கும் இடங்களை வேலூர் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலெட்சுமி, மேயர் சுஜாதா மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். முள்ளிப்பாளையம் நிக்கல்சன் கால்வாய் கன்சால்பேட்டை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்யும் போது நிக்கல்சன் கால்வாய் ஒட்டிய ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவும் தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் மழை நீரை வெளியேற்றவும் உத்தரவிட்டார்.
அப்போது கன்சால்பேட்டை காந்திநகர் மற்றும் வனவாசி நகரை சேர்ந்த மக்கள் தங்கள் பகுதியிலும் கடந்த காலங்களில் பெய்து வரும் மழை காரணமாக கழிவுநீரோடு சேர்ந்த மழை நீரும் தேங்கி நிற்பதால் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகிறோம்

ஆகவே மாவட்ட ஆட்சியர் தங்கள் பகுதியையும் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் எனக் கூறி திடீரென மாங்காய் மண்டியில் பழைய பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் வட்டாட்சியர் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.
இதே போன்ற மறியலை சுன்னத் ஜமாத் சார்பாக நடத்தப்படும் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

admin
