டூ வீலரில் டிக்டாக் செய்தால் விட்மாட்டோம்! வேலூர் எஸ்.பி.எச்சரிக்கை!
ஜி.கே.சேகரன்,
சாலை போக்குவரத்து பணியில் ஈடுபடும் போக்குவரத்துக் காவலர்கள் உடல் நலம் காக்க ஆக்சிஜன் செறிவூட்டும் நிலையத்தை தொடங்கி வைத்த மாவட்ட எஸ்பி மயில்வாகனன் டூ வீலரில் டிக்டாக் செய்தால் விட்மாட்டோம் என எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
மாவட்டத்தில் முதல்முறையாக குடியாத்தம் போக்குவரத்து காவல் நிலையத்தில் இது தொடங்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் சாலை விபத்துகளை தடுக்க ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே வேலூர் மாவட்ட எஸ்,பி மயில்வாகனன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் குடியாத்தம் போக்குவரத்து காவல் நிலையத்தில் அமைக்கப்பட்ட நூலகத்தையும் திறந்து வைத்தார்.
மேலும் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபடும் போக்குவரத்து காவலர்கள் உடல் நலத்தை காக்க போக்குவரத்து காவல் நிலையத்தில் ஆக்சிஜன் செறுவூட்டும் நிலையம் போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பாக அமைக்கப்பட்ட ஆக்சிசன் செறுவூட்டு நிலையத்தையும் காவலர்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட எஸ்பி மயில்வாகனன் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
இருசக்கர வாகனத்தை அதி வேகமாக இயக்கி டிக் டாக் செய்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
சில இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்பவர்களை போலீசார் சேஸ் செய்து பிடிக்க முயல்கின்றனர் அப்போது எதிர்பாராத விதமாக விபத்துகளும் ஏற்படுகிறது.
அதனால் அந்த மாதிரி இளைஞர்களை பாதிப்பு வரக்கூடாது என்றும் அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. மேலும் அரசு மற்றும் தனியார் பேருந்து படியில் நின்று பயணம் செய்யும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு காவல்துறையின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக மாவட்ட எஸ்பி தெரிவித்தார்.

admin
