தப்பு என்று தெரிந்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்போம்! அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

தப்பு என்று தெரிந்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்போம்! அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

ஜி.கே.சேகரன்,

 தப்பு என்று தெரிந்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்போம் பள்ளி கல்வித்துறை யாரையும் தப்ப விடாது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி!திருப்பத்தூர் இந்த முறையை விட அடுத்த முறை பர்பாமன்ஸ் அதிகமாக இருக்கும் என தலைமை ஆசிரியர்கள் உறுதி!

 திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஏழாவது மாடியில் உள்ள கூட்டரங்கில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவு ஆய்வு (எஸ். எல். ஏ. எஸ்.) 2025 மிளாய்வு கூட்டம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது.

 அப்போது இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் மூலம் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

  கூட்டம் முடிவுக்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, புரிதல் தன்மையோடு பள்ளி மாணவர்களை எவ்வாறு படிக்க வைக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசித்தோம்.

  திருப்பத்தூர் மாவட்டத்தை பொருத்தவரை 92 சதவீதம் முன்னேற்றத்தை கொடுத்து வருகின்றனர் ஆனால் இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களிடம் கூறப்பட்டுள்ளது.

  அடுத்த முறை திருப்பத்தூர் மாவட்டத்திற்கு நான் வரும் பொழுது எங்களுடைய பர்பாமன்ஸ் நீங்கள் பாராட்டுது கூறியதலாக இருக்கும் என தலைமை ஆசிரியர்களும் தெரிவித்துள்ளனர்.

   நல்ல செய்தியாக இருந்தாலும் விமர்சன செய்தியாக இருந்தாலும்  மாவட்ட ஆட்சியரைக் கொண்டு உடனடியாக சரி செய்கின்ற பணியில் ? ஈடுபடுவோம்.

 மேலும் தனியார் பள்ளிக்கு நிகராக கொடுக்கக்கூடிய நிகழ்வையும் அரசு பள்ளியில்   மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். 14417 மற்றும் 1098 ஆகிய எண்களில்  குற்றம் சார்ந்ததோ, சந்தேகம் சார்ந்ததோ, மட்டுமல்லாமல் பள்ளிக்கு நாளை விடுமுறை  இருக்கிறதா என்பதை கூட இந்த தொலைபேசியில் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

  மேலும் இந்த தொலைபேசியின் வாயிலாக குற்றச் சம்பவங்கள் குறித்து தகவல் தெரிவித்தால் அதிகாரியில் நேரில் அன் யூனிபார்மில் சென்று விசாரணை மேற்கொள்வார்கள்.

  விசாரணையில் குற்றம் உண்மை என்று தெரிய வந்தால் யாராக இருந்தாலும் குற்றச் சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் மீது இந்த அரசாங்கம் தண்டனையை பெற்று தரும் தப்பு என்று தெரிந்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்போம் பள்ளி கல்வித்துறை யாரையும் தப்ப விடாது என கூறினார்.