குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை -பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.10,00,000/- இழப்பீடு!எஸ்.பி.பாராட்டு!

குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை -பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.10,00,000/- இழப்பீடு!எஸ்.பி.பாராட்டு!

 கு.அசோக்,

 கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை -பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.10,00,000/- இழப்பீடு பெற்றுத் தந்த இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை

   கடந்த 04.08.2016 அன்று இராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாணாவரம் மோட்டூர் கிராமத்தில் நடைபெற்ற கொலை சம்பவம் தொடர்பாக, எதிரி அசோக்குமார் (வ/45), த/பெ தேவராஜ் மீது பாணாவரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 இவ்வழக்கு அரக்கோணம் இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் துரிதமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

  இந்நிலையில் நேற்று (19.09.2025) அரக்கோணம் இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி திருமதி. ஜெயமங்களம் அவர்கள், குற்றவாளி அசோக்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.10,00,000/- இழப்பீடு தொகை வழங்குமாறு தீர்ப்பு வழங்கினார்.

  மேலும், இவ்வழக்கில் நீதிமன்றத்தில் சிறப்பாக வழக்கு நடத்தி தண்டனை பெற்றுத் தந்த கூடுதல் அரசு வழக்கறிஞர் திரு. ஜானகிராமன், மற்றும் புலனாய்வு அதிகாரிகளான திரு. செந்தில் (அப்போதைய பாணாவரம் வட்ட ஆய்வாளர்), திரு. நாகேந்திரன் (தற்போதைய பாணாவரம் வட்ட ஆய்வாளர்), நீதிமன்ற காவலர் 877 திரு. குமார் ஆகியோரை, இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. அய்மன் ஐமால், இ.கா.ப., அவர்கள் பாராட்டி வாழ்த்தினார்.