12 ஆண்டுகளுக்கு பின்னர் 61 பேருக்கு வேலை!

12 ஆண்டுகளுக்கு பின்னர் 61 பேருக்கு வேலை!

ஜி.கே.சேகரன்,

 திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் 61 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு 12 ஆண்டுகளுக்கு பின்னர் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி நேற்றுஅவர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப வந்தனர் காலதாமதம் செய்ய கூடாது எனவும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென ஆர்பாட்டம்

வேலூர்மாவட்டம், சேர்க்காட்டில் தமிழக அரசின் திருவள்ளூவர் பல்கலைக்கழகம் உள்ளது.  இதில் 2013 ஆம் ஆண்டு அப்போது பணியாற்றிய தொழிலாளர்களை உயர் கல்வித்துறை 61 பேரை  எந்த வித முன் அறிவிப்புமின்றி திடீரென பணி நீக்கம் செய்தது.

   இதனால் பாதிக்கப்பட்ட திருவள்ளூவர் பல்கலைக்கழக தொழிலாளர்கள், சங்க தொழிலாளர் நல நீதிமன்றத்தை நாடினர்.

 ரப்போது பணி நீக்கம் செல்லாது என தொழிலாளர் நீதிமன்ற உத்தரவிட்டது இதனையே சென்னை உயர் நீதிமன்றமும் பணி நீக்கம் செல்லாது என உத்தரவிட்டது.

  2010 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி இவர்களை பணிநிரந்தரம் செய்வதாகவும் அதற்குப் சிறிய தகுதி தேர்வு நடத்தபடும் என கூறினார்.

   ஆனால் ஆட்சிமாற்றத்திற்கு பின்னர் இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் தற்போது தமிழக அரசு தொழிலாளர்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

   ஆனால் உச்சநீதிமன்றம் தமிழக அரசின் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவை அமுல்படுத்தும் நோக்கில் திருவள்ளூவர் பல்கலைக்கழகம் பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து பணியாளர்களையும்  மீண்டும் பணியில் சேர சான்றுகளுடன் வர கூறினார்கள்.

   இதனால் தொழிலாளர்கள் நல சங்க தலைவர் இளங்கோ மற்றும் செயல் தலைவர் சிவா ஆகியோர்கள் தலைமையில் ஒன்று திரண்டு பதிவாளரிடம் முறையிட்டு ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினார்கள்.

  பின்னர் சான்றிதழ் சரி பார்க்க அனைத்து தொழிலாளர்களையும் அழைத்து சென்றனர்.

12 ஆண்டுகால போராட்டம் முடிவுக்கு வந்தது.

  இதில் பேராசிரியர் குமார்,பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர்கள் சங்கம் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க மாநில தலைவர் சரவணன்,கபீர் ,பாரதியார் பல்கலைக்கழக பணியாளர்கள் சங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர் .