வரி கொடுத்தால் தான் 100 நாள் வேலை! பிடிஓ அடாவடி! வேலை கொடுத்தால் வரி கட்டுகிறோம்  - மக்கள்!

வரி கொடுத்தால் தான் 100 நாள் வேலை! பிடிஓ அடாவடி! வேலை கொடுத்தால் வரி கட்டுகிறோம்  - மக்கள்!

கு.அசோக்,

  வரி கொடுத்தால் தான் 100 நாள் வேலை என பிடிஓ அடாவடி செய்த நிலையில், வேலை கொடுத்தால் அந்த சம்பளத்தில் வரி கட்டுகிறோம் என மக்கள் 100 நாள் வேலை கேட்டு  பெண்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து   போராட்டம் - அதிகாரிகள் பேச்சுவார்த்தை.

   வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வரதரட்டிபல்லி பஞ்சாயத்தில் பண்டப்பள்ளி, மோடிகுப்பம்,வி.எஸ். புரம், குப்பக்கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் 2000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.

   இந்த பகுதியில் கடந்த ஓராண்டக 100 நாள் வேலை வழங்கவில்லை என  கூறப்படுகிறது.

   இந்த நிலையில் இந்த பகுதியை சேர்ந்த பெண்கள் பலமுறை ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் மனு அளித்தும் வேலை வழங்ககோரி முறையிட்டும்  எந்த பயணம் இல்லாத நிலை இருந்தவந்தது.

 அப்படியிருக்க நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

   மேலும் முறையாக 100 நாள் வேலை வழங்காததால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் எங்கள் கிராமத்தில் வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்தினால் மட்டுமே 100 நாள் வேலை தருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

  ஆனால் எங்களுக்கு வேலை இல்லாமல்  நாங்கள் எப்படி வரி செலுத்துவது என அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் வேதனை தெரிவிக்கின்றனா.

  ¢இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.