மாணவர்களுக்கு உணவு பரிமாறி... அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட முதல்வர் விஜய்!

மாணவர்களுக்கு உணவு பரிமாறி... அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட முதல்வர் விஜய்!

செய்தி: ம.பா. கெஜராஜ்,

சென்னை:திருவான்மியூர் அரசு நடுநிலைப் பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தை முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.

விழாவில் மாணவர்களுக்கு முதல்வர் விஜய் காலை உணவு பரிமாறியதுடன், அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். பின்னர் பள்ளி வகுப்பறைகளுக்குச் சென்று மாணவர்களிடம் கலந்துரையாடி, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்த விரிவாக்கத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 15,910 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 15.30 லட்சம் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்கள் பயன்பெற உள்ளனர். இதற்காக நடப்பு நிதியாண்டில் கூடுதலாக ரூ.217 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

முதல் நாளில் மாணவர்களுக்கு வெண் பொங்கல், சாம்பார் மற்றும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. இதுவரை 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த காலை உணவுத் திட்டம், தற்போது நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.