“ஏரிக்குள்ளே மாடிவீடா? கீழ்வடுகன் குட்டையில் நீர்நிலை ஆக்கிரமிப்பு என புகார் – ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு!
|
|
10:39 AM (1 minute ago) |
||
|
|||
கீழ்வடுகன் குட்டை ஏரியை ஆக்கிரமித்து தனி நபர் மாடிவீடு கட்டுகிறார் நீர்நிலை ஆக்கிரமிப்பை உடனடியாக தடுக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கீழ் வடுகன் குட்டை கிராமத்தை சேர்ந்த பொதுமக்களின் சார்பில் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது.
அதில் ஜாப்ராபேட்டை ஊராட்சிக்குட்பட்ட வடுகன் குட்டை ஏரி தனி நபர் ஏரியை ஆக்கிரமிப்பு செய்து ஏரி கரையை உடைத்து தற்போது மாடி வீடு கட்டி வருகிறார்.
நீர் நிலை புறம்போக்குகளில் எந்த ஆக்கிரமிப்பும் இருக்க கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி இவர் ஏரியின் உள்ளே வீடு கட்டுகிறார்.
இதுகுறித்து அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, தற்போது 15 செண்ட் இடத்தில் ஏரியில் வீடு கட்டுவதால் விவசாயம் பாதிக்கபடும்.
எனவே நீர் நிலை ஆக்கிரமிப்பை உடனடியாக மாவட்ட ஆட்சியர் தடுத்து நிறுத்தி வீட்டை கட்டாமல் தடுத்து நிறுத்துவதாக கேட்டுகொள்கிறோம் என மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷிடம் வழங்கினார்

admin
