விசிக - ஐ யு எம் எல்- த.வெ.க.வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு! அதிமுகவில் பிளவு?!
ம.பா.கெஜராஜ்,
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 சீட்டுகளில் வென்ற தமிழக வெற்றி கழகம் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் ஆட்சி அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் காங்கிரஸ் ஐந்து சீட்டுகளை பெற்றிருந்த நிலையில் அவர்கள் முதல் ஆளாக தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா இரண்டு என நான்கு தொகுதிகளில் வென்றிருந்த நிலையில் அவர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
அப்படி இருக்க விசிக இரண்டு தொகுதியில் வென்று இருந்த நிலையில் அவர்களின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க முடியும் என்கின்ற சூழல் நிலவியது.
இந்நிலையில் தற்போது விசிகாவும் விஜய் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் கொடுத்திருக்கிறது.
இதைத் தவிர இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் தனது இரண்டு எம்எல்ஏக்களின் ஆதரவுகளை விஜய் கட்சிக்கு தெரிவித்து கடிதம் கொடுத்து வட்டது.
ஆகவே தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க போதுமான பெரும்பான்மை எண்ணிக்கையை விட அதிகமான சீட்டுகளை பெற்றிருக்கிறது.
இருந்த போதும் ஏற்கனவே இரண்டு முறை விஜய்யை திருப்பி அனுப்பி வைத்த ஆளுநர் அருலைக்கர், பத்தாம் தேதிக்குள் பெரும்பான்மை நிரூபித்து காட்டுங்கள் என்று விஜய்க்கு நிபந்தனை விதித்தார்.
இதில் இன்று மாலை ஆளுநர் அவர்கள் கேரளாவுக்கு புறப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
தமிழகத்தில் ஒரே ஒரு சீட்டை வென்றுள்ள பிஜேபி இதன் பின்னணியில் ஆட்சி அமைக்க விடாமல் சதி செய்வதாக கருதப்படுகிறது.
ஆகவே விஜய் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார்.
இன்னும் சற்று நேரத்தில் அதற்கான முடிவுகள் தெரிய வரும்.
அரசியல் சாசனப்படி ஆளுநர் அவர்கள் விஜயை ஆட்சி அமைக்க அதிகாரப்பூர்வமாக அழைத்து ஜனநாயக நாட்டின் நடுநிலையை நிலை நாட்டவேண்டும் என்பது அனைவரின் கருத்து.
இது ஒரு புறம் இருக்க அதிமுகவில் குடுமி பிடி சண்டை நடந்து கொண்டிருக்கிறது.
சிவி சண்முகத்தின் தலைமையில் 35 சட்டமன்ற உறுப்பினர்கள் தனியே போர்க்கொடி தூக்கிருப்பதாக தெரிகிறது.
அவர்கள் விஜய்யை சந்திக்க கூடும் என்று தெரிகிறது.
இதே வேளையில் அதிமுகவின் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் மிஸ்ஸிங் எனத் தகவல்.
சற்று நேரம் பொருத்திருப்போம் முழு தகவல் தொடர்ச்சியாக தெரிய வரும்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள், இவற்றை உணர்ந்து ஆளுநர் செயல்பட்டால் நலம்.
விடுதலை சிறுத்தை கட்சிகள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு கொடுப்பதற்கு இரண்டு காரணங்கள் தான் என்றும் அதில் ஜனாதிபதி ஆட்சி வந்து விடக்கூடாது என்பதிலும் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்கு விசிக தடையாக இருக்கக் கூடாது என்றும் கருத்தில் கொண்டு ஆதரவு தெரிவித்தோம் என்று திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.
இது ஒருபுறம் இருக்க ஆளுநரிடம் நேரம் கேட்டு பெறாமல ஆளுநர் மாளிகைக்கு நிறைந்த விஜய் பாதி வழியில் வீடு திரும்பினார்.

admin
