என்ன செய்யலாம்? விசிக ஆலோசணை!!

ஜே.அருண் ஹென்றிக்ஸ்,
விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் ஆணைக்கிணங்க கோவையில் ஏப்ரல் 14 புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு சனநாயகம் காப்போம், பேரணி தொடர்பான கோவை ஒருங்கிணைந்த மாவட்ட ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரம் எம். எஸ். என். மஹாலில் நடைபெற்றது.
அதில் மேலிட பொறுப்பாளர் ஜெ.மு.இமயவரம்பன் தலைமைவகித்தார்.
கோவை ஒருங்கிணைந்த மாவட்டம் ஜோ.இலக்கியன்,மாவட்டச் செயலாளர் கோவைமாநகரம் மாவட்டம். இஸ்லாமிய ஜனநாயக பேரவை கோவை மாநகர மாவட்ட அமைப்பாளர் தளபதி சபீக் மற்றும் மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள்தொகுதி செயலாளர் முகாம் நிர்வாகிகள் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்ட முடிவில் காந்திபுரம் பெரியார் சிலைக்கு மாலையிட்டு பேரணியாக சிவானந்தா காலனியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பது என்று தீர்மானமும் தீர்மானம் முன்னெடுக்கப்பட்டது.