கைது செய்யறீங்களா? இல்லையா?!

ஜி.கே.சேகரன்,
பாஜக ஒன்றிய துணைதலைவர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய கோரி வள்ளிமலையில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்பாட்டம்
வேலூர் மாவட்டம், வள்ளிமலை தேரடி அருகில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பாஜக ஒன்றிய துணைதலைவர் ரமேஷ் தாக்கியவர்களை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது.
அக்கட்சியின் மாவட்டத்தலைவர் மனோகரன் தலைமையில் நடந்த ஆர்பாட்டத்தில் சமூக விரோதிகளை கைது செய்ய கோரி கோஷமிட்டனர்.
அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கோஷங்களை எழுப்பினார்கள் இதில் பாஜக நிர்வாகிகள் ஜெகன்,பாபு,மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சுமதி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.