பள்ளி கல்வி முடிக்க வைக்க சவாலாக உள்ளது! மாவட்ட ஆட்சித்தலைவர்!

பள்ளி கல்வி முடிக்க வைக்க சவாலாக உள்ளது! மாவட்ட ஆட்சித்தலைவர்!

கு.அசோக்,

வேலூர் மாவட்டத்தில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் சார்பில்அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட  திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தொடங்கி வைத்தார்.- மாணவர்களை தன்னிலைப்படுத்தி உளவியல் ரீதியாக அனுகி அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் - பொதுத்தேர்வில்  100 சதவிகிதம் தேர்ச்சி பெறும் வகையில்  ஆசிரியர்கள் உழைக்க வேண்டும் ஆட்சியர் பேச்சு.

 இந்நிகழ்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  பிரேமலதா, உள்ளிட்டோர் பங்கேற்று திறன்  மேம்பாட்டு பயிற்சி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டது.  

 இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேசுகையில்  மாணவர்களை ஆசிரியர்கள் தன்னிலைப்படுத்திட வேண்டும் அவர்களை படிப்பில் கவனம் செலுத்தி அவர்களை பள்ளி கல்வி முடிக்க வைப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

  சமூதாயத்தில் உள்ள பல்வேறு பிரச்சணைகளாக பொருளாதார சூழ்நிலையாலும்  பள்ளிகளில் மாணவர்களை நீங்கள் நல்வழிப்படுத்த வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

  உளவியல் பூர்வமாக அவர்களை எவ்வாறு அனுகலாம் என்பதில் உங்களுக்கு பயிற்சி அளிக்கிறோம் இன்று உங்களுக்கு பகிர்ந்த கருத்துக்களை ஆசிரியர்களுக்கு சொல்லி நல்லவைகளை ஏற்படுத்த வேண்டும்.

  அன்பு மற்றும் புரிதலால் நல்வழிபடுத்தலாம் அதிகமாணவர்கள் உள்ளதால் ஆசிரியர்களும் பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது.

 நீங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற நோக்கில் தான் உங்களுக்கு இந்த பயிற்சி அளிக்கபடுகிறது மேலும் பொதுத்தேர்வுகளுக்கு நாட்கள் குறைவாகவே உள்ளது. குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்கள் மீது சிறப்பு கவணம் செலுத்தி அவர்களையும் தேர்ச்சியடையும் வகையில் ஏற்படுத்தினால் 100 சதவிகித தேர்ச்சி என்பது உறூதி.

 நீங்கள் ஒவ்வொருவரும் உழைத்தால் அது சாத்தியப்படும் இலக்காகும் என பேசினார்.