மாட்டிறைச்சி வருவலால் தெரு நாய்கள் அதிகரிப்பு! ஆடுகளை கொன்று குவித்த சம்பவம்!
ஜி.குலசேகரன்,
தெருநாய்கள் கடித்து குதறியதில் 9 ஆடுகள் இரண்டு வாத்துகள் உயிரிழப்பு போலீசார் விசாரணை.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பெரியகம்மியம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட கீழ்முஸ்லிம்தெரு பகுதியை சேர்ந்தவர் ரேவதி.
இவர் தங்களுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தில் வீடுகட்டி விவசாயம் செய்துகொண்டு விவசாய நிலத்திலேயே ஆடு,மாடு,கோழி,வாத்து உள்ளிட்டவைகளை வளர்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் வழக்கம்போல நேற்று ஆடு,மாடுகளை கொட்டகையில் கட்டி விட்டு கோழி,வாத்து உள்ளிட்டவற்றை கூண்டில் அடைத்துவிட்டு தூங்க சென்றுள்ளார்.
நள்ளிரவு 2 மணி அளவில் ஆடு கத்தும் சத்தம் கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது மூன்று தெருநாய்கள் ஆடுகள் மற்றும் வாத்துகளை நாய்கள் கடித்து குதறி உள்ளது.
அதனைப் பார்த்த ரேவதி கத்தி கூச்சலிட்டு தெருநாய்களை விரட்டி அடித்துள்ளார்.மேலும் மூன்று தெருநாய்கள் கடித்துகுதறியதில் 9 ஆடுகள் மற்றும் இரண்டு வார்த்துகள் உயிரிழந்துள்ளது.
பின்னர் இது தொடர்பாக ரேவதி பெரியகம்மியம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விஏஓ மற்றும் ஜோலார்பேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியில் மாட்டு இறைச்சி வருவல் கடை நடத்தி வருவதாகவும், ஆகவே அங்கு தெருநாய்கள் வெறிப்பிடித்து அலைவதையும் கண்டுபிடித்தன்மர்.
இது தொடர்பாக ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தெருநாய்கள் கடித்து குதறியதில் 9 ஆடுகள் இரண்டு வாழ்த்துக்கள் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

admin
