சியோன் பெந்தகோஸ்தே சபையின் 21 ஆம் ஆண்டு விழா!

சியோன் பெந்தகோஸ்தே சபையின் 21 ஆம் ஆண்டு விழா!

கு.அசோக்,

 வேலூர்மாவட்டம்,வேலூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள சியோன் பெந்தே கோஸ்தே சபையின் புதிய ஆலயம் அமைக்கப்பட்ட 21 ஆம் ஆண்டு விழாவானது சபையின் தலைமை போதகர் இமானுவேல் பால் தலைமையில் நடைபெற்றது.

 இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன் நந்தகுமார் மேயர் சுஜாதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக ஆலய வளாகத்தில் ஆராதணைகள் செய்து கொடியேற்றி விழாவை துவங்கினார்கள் இதில் பெந்தே கோஸ்தே திருச்சபையை சேர்ந்த சுமார் 700-க்கும் மேற்பட்ட மக்கள் இதில் கலந்துகொண்டனர் பல்வேறு உதவிகளும் மக்களுக்கு வழங்கப்பட்டது.