நெற்பயிரை ருசிக்கும் காட்டுப் பன்றிகள்! குறட்டையில் வன அதிகாரிகள்!
கு.அசோக்,
குடியாத்தம் அருகே அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்களை 30 மேற்பட்ட பன்றிகள் மிதித்து சேதம் - வனத்துறையினர் விசாரணை.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த மேல் அனுப்பு கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இரவு பகுதி ஒட்டி உள்ள விவசாய நிலத்தில் சிவலிங்கம் என்பவர் நெல் பயிரிட்டு அறுவடைக்கு சில தினங்களில் இருக்கும் நிலையில் அவர் நிலத்தில் புகுந்த சுமார் 30க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் மிதித்து பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்களை சேதப்படுத்தி உள்ளது.
தொடர்ந்து இந்த பகுதியில் விவசாய நிலங்களை காட்டுப்பன்றி,யானை, மான் மற்றும் சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகளால் சேதப்படுத்தி வருவதால் விவசாயம் செய்ய முடியாமல் நிலங்களை சேதப்படுத்தி வருவதாகவும் மேலும் குடியாத்தம் வனத்துறையினருக்கு அப்பகுதி விவசாயிகள் வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் வராமல் தடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

admin
