பனி மழையில் ஆம்பூர்!

பனி மழையில் ஆம்பூர்!

ஜி.கே.சேகரன்,

ஆம்பூரில் பிற்பகல் இரண்டு மணியை கடந்தும் விலகாத பனி வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் அவதி

 திருப்பத்தூர்மாவட்டம், ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டு வருகிறது.

  பிற்பகல் 2 மணியை கடந்தும் லேசான பனிப்பொழிவுடன் அடர்ந்த பனி காணப்படுவதால், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லக்கூடிய வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி மெதுவாக சென்று கொண்டிருக்கின்றன.

  அதேபோல், நகரின் முக்கிய பகுதிகளில் வணிக நிறுவனங்கள் உள்ள பகுதிகளிலும் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.பிற்பகல் 2 மணியை கடந்தும் கடுமையான பனிப்பொழிவுடன் கூடிய அடர்ந்த பனி நீடித்து வருவதால், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

  மார்கழி மாதத்தின் துவக்கத்திலேயே பனி அதிகமாக காணப்பட்டு வரும் நிலையில், இப்படி பனி அடர்த்தியாக காணப்படுவதால், அடுத்தடுத்த நாட்களில் பனியின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பது குறித்து பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.