1.27 கோடி இலவச வேட்டி சேலைகள் ரெடி! அமைச்சர் ஆர்.காந்தி தகவல்!
கு.அசோக்,
பொங்கலுக்கு பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய வேட்டி சேலைகள் 1 . 27 கோடி குடோன் களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது - கரும்பு பயிரிடுவது மாவட்டத்தில் குறைந்துள்ளது கரும்பு வரத்து இல்லாததால் தான் மாவட்டத்தில் இரண்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டது - கைத்தறி துணி நூல்துறை அமைச்சர் காந்தி அம்முண்டியில் பேச்சு.
வேலூர்மாவட்டம்,வேலூர் அம்முண்டியில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் காந்தி துவங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி கூட்டுறவு சர்க்கரை ஆலை இணை பதிவாளர் சோமசுந்தரம் உள்ளிட்டோரும் திரளான விவசாயிகளும் இவ்விழாவில் பங்கேற்றனர்
இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி பேசுகையில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் வேலூர், திருப்பத்தூர் மற்றும் ஆம்பூர்ஆகிய 3 இடங்களில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் இயங்கி வந்தன, இதில் வேலூரைத் தவிர மற்ற சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டுவிட்டன.
வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைதொடர்ந்து நல்ல முறையில் இயங்குவதற்கு முக்கிய காரணம் மாண்புமிகு நீர்வளத்துறைஅமைச்சர் அவர்கள் இந்த ஆலையின் மீது தனிகவனம் செலுத்தி இதற்கான நிதியை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் பெற்று வழங்கி வருவதே ஆகும்.
வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முழு திறன் 4.30 இலட்சம்மெட்ரிக் டன் இதில்தற்பொழுது 1.25 இலட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரைவை செய்ய இலக்குநிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது கரும்பு சாகுபடி குறைந்து வருகிறது. நெல்பயிரிடுவதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். விவசாயிகளைஊக்கப்படுத்துவதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எண்ணற்றதிட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் 1989 ஆம் ஆண்டு முதலமைச்சராகஇருந்தபோது விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்கினார். தற்பொழுதுநம்முடைய முதலமைச்சர் ஆண்டிற்கு 50,000 இலவச மின் இணைப்புகளைவழங்கவேண்டுமென இலக்கு நிர்ணயித்து கடந்த 4.5 ஆண்டுகளில் 2,25,000 இலவசமின்இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்திய நாட்டிற்கு முன்னோடியானதிட்டங்களை செயல்படுத்தி அனைத்து முதலமைச்சர்களுக்கும் முன்மாதிரியாகதிகழ்கிறார்.
மக்களைத்தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, அன்பு கரங்கள், காலைஉணவுத்திட்டம் போன்ற சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
காலை உணவுத்திட்டத்தை கனடா நாட்டிலிருந்து அரசு அதிகாரிகள் வந்துபார்வையிட்டு, இத்திட்டத்தை அவர்களது நாட்டில் செயல்படுத்தியுள்ளனர். இதுபோன்றஒவ்வொரு திட்டங்களும் பிற மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களுக்கு தேவையானதிட்டங்களை செயல்படுத்துவதற்காக அரசு அலுவலர்களுக்கு முழு சுதந்திரத்தை வழங்கிஅவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.
மக்களின் வரிப்பணம் வீணாக்கப்படாமல்மக்களுக்கான திட்டங்களாக செயல்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டுமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்பட்டு வருகிறார் என அமைச்சர் காந்தி, பேசினார்
பின்னர் அமைச்சர் காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்த நான் கரை ஆண்டில் இலவச வேட்டி சேலையை தரமாக வழங்கியுள்ளோம் ஆனால் இந்த ஆண்டு 100 சதவிகிதம் 1.27 கோடி இலவச வேட்டி சேலைகள் சிவில் சப்ளை குடோன் களுக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளோம்.
நாங்கள் உற்பத்தி செய்து குடோன்களுக்கு கொடுத்துவிட்டோம் அதனை மக்களுக்கு வழங்க வேண்டியது அவர்களின் வேலை.
13 லட்சம் வேட்டி கலப்படம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளது அது கூட்டுறவு துறையில் நடக்கும் தவறு நாங்கள் பொறுப்பல்ல.
நல்ல திட்டங்களையே நாங்கள் செய்து வருகிறோம், இந்தியாவிலேயே ஒன்றிய அரசை எதிர்க்கும் முதலமைச்சர் தமிழக முதல்வர் தான் வேறு யாருமில்லை.
வட இந்தியாவில் பாஜக வென்றதை போல் தமிழகத்தில் நடக்காது 1. 25 லட்சம் மெட் ரிக் கரும்பு தான் இந்த ஆண்டும் அரவைக்கு வரும் என சொன்னார்.

admin
