கே.எஸ்.எஸ். தியாகபாரி தலைமையில் பாரம்பரரிய ஆன்மீக விழா!

கே.எஸ்.எஸ். தியாகபாரி தலைமையில் பாரம்பரரிய ஆன்மீக விழா!

 க.பாலகுரு

   திருவாரூர் தண்டலையில் ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது..   

  திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் திருவாரூர் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு இணைந்து நடத்தும், ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்கள்.

 23 ஆம் தேதி 4 மணிக்கு பக்தி இன்னிசையுடன் துவங்கி இரவு 8 மணிக்கு சீனிவாச திருகல்யாணமானது, வேதவிற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீ தேவி பூதேவி தாயாருக்கு திருமாங்கல்லயதாரணம் எனும் திருக்கல்யாண வைபவம் தண்டனை எஸ்.வி.டி காம்ப்ளக்ஸ் வளாகத்தில் நடைபெற்றது.

  இந்நிகழ்வில் ஆனந்த குருகுலம் மாணவிகளின் இசை நடன நிகழ்ச்சி நடந்தது.

  திருவாரூர் வேலுடையார் கல்வி குழுமத்தின் தலைவர் கே.எஸ்.எஸ். தியாகபாரி, சோழமண்டல தமிழ் இலக்கிய அமைப்பு பொது செயலாளர் சிவகுருநாதன் ஆகியோரின் தலைமையில், திருவாரூர்

ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு கௌரவ தலைவர் ஸ்ரீதரன் முன்னிலையிலும்,ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு நிறுவனத் தலைவர் ஜே. கனகராஜன் எழுதிய '60 வயது கடந்து வந்த பாதை' என்ற நூல் மற்றும் ஆன்மிகம் ஆனந்தம் அமைப்பின் சிறப்பு மலரும் வெளியீடப்பட்டது.

   இந்த நிகழ்வில் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ ராகவன் குருஜி ஆகியோர் கலந்து கொண்டு நூல்களை வெளியிட ஸ்ரீ நாராயணி நிதி நிறுவன தலைவர் கார்த்திகேயன் மற்றும் புலவர்  சண்முக வடிவேல் ஆகியோர் நூல்களை பெற்றுக்கொண்டனர்..

   மேலும் 'திருமாலின் பெருமை' என்ற தலைப்பில் கலைமாமணி தேச மங்கையர்கரசி சொற்பொழிவும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தமிழிசை சுடர் சுசித்ரா குழுவினர் 'பெருமாளின் பக்தி இன்னிசை' இசையும் நடைபெற்றது.