காட்பாடி நகருக்குள் புகுந்த யானைகள்! வனத்துறையினர் அலட்சியம்!
கு.அசோக்,
காட்பாடி ராஜிவ்காந்தி நகர், இந்திராநகர் குடியிருப்பு பகுதியில் முகாமிட்ட 13க்கும் மேற்பட்ட யானைகள் இரவில் வந்ததால் பொதுமக்கள் அச்சம்வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் யானை சென்ற வழித்தடத்தை தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி செங்கோட்டை அடுத்த ராஜீவ் காந்தி நகர் பகுதியில் நள்ளிரவில் 13 யானைகள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் யானை எவ்வழியாக சென்று கொண்டுள்ளது என்பதை யானையின் தடங்களை பின்தொடர்ந்து சுமார் 20 கிலோ மீட்டருக்கு மேல் தேடிச் சென்றனர்.
வன்றந்தாங்கல் பகுதியில் வயல்களுக்கு போடப்பட்டிருந்த வேலிகளை யானைகள் உடைத்துச் சென்றுள்ளது. அவை தாங்கல் சிங்காரட்டியூர் விவசாய நில வனப்பகுதிகள் வழியாக சென்றுள்ளது என தற்போதைக்கு தெரியவந்துள்ளது.
காட்பாடி வட்டத்தில் உள்ள பகுதிகளில் விலங்குகள் நிம்மதியாக வாழ வனத்துறையினர் வழிவகை செய்யவில்லை என்பதால் அவை நகருக்குள் நுழையும் நிலை ஏற்பட்டது.

admin
