அரசு மருத்துவமனைக்குள் ரவுடி வெட்டி கொலை! சுட்டு பிடித்த போலீஸ்!
ம.பா.கெஜராஜ்,
திண்டுக்கல் அருகே பல் வேறு வழக்குகளில் தொடர்பு டைய ரவுடி விக்னேஸ்வரனை போலீசார் சுட்டுப் பிடித்தனர். சவேரியார் பாளையம் பகுதி யில் பதுங்கி இருந்த ரவுடியை பிடிக்க சென்றபோது, அரி வாளால் தாக்கிவிட்டு தப்ப முற்படும்போது போலீசா£ அவனை சுட்டுப் பிடித்தனர்.
ரவுடி விக்னேஸ்வரன் தப்பி ஓடும்போது போலீசார் சுட்டதில் வலது காலில் காயமடைந்தார்.
காயமடைந்த விக்னேஸ்வரன் மருத்துவமனையில் அனுமதி க்கப்பட்டுள்ளான்.
ரவுடி விக்னேஸ்வரன் மீது 3 கொலைவழக்கு உள்பட 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் ரவுடி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதே போல் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த தோழியை காண்பதற்காக வந்த ரவுடி ஆதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தலை, கை, கால் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு ஆதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ரவுடி ஆதியை வெட்டிக்கொன்றது தோழி சுசித்ராவின் உறவினர்கள் மூன்று பேர் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தலைமறைவான சுசித்ராவின் உறவினர்களாக சூர்யா, அலிபாய் மற்றும் கார்த்திக் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

admin
