பேருந்து நிறுத்தம் கோரி மறியல்!

பேருந்து நிறுத்தம் கோரி மறியல்!

கு.அசோக்,

 திமிரி நேரு பஜாரில் பேருந்து நிறுத்த வேண்டும் எனக் கூறி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகைப் போராட்டம், அதிகாரிகள் பேச்சு வார்த்தை.

 இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள திமிரி பேரூராட்சியில் கடந்த ஓராண்டுகளுக்கு முன்பு ஆரணி ஆற்காடு நெடுஞ்சாலையில் சுமார் 4 கோடியே 19 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு  பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

  இந்நிலையில், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு முதல் திமிரி நேரு பஜாரில் பேருந்து நின்று சென்றது வழக்கம். புதிய பேருந்து நிலையம் கட்டியதால் பேருந்துகள் அனைத்தும் நேரு பஜாரில் நிற்காமல் பேருந்து நிலையம் சென்றடைகிறது.

  பொதுமக்கள் விவசாயிகள் பள்ளிக் கல்லூரி மாணவ மாணவிகள் நடந்து  பேருந்து நிலையம் சென்றனர்.

  இந்நிலையில் திமிரி நேரு பஜாரில் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

   இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன், இராணிப்பேட்டை மாவட்ட பொறுப்பு டி.எஸ்.பி வெங்கடகிருஷ்ணன், கலவை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, ஆற்காடு நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர், திமிரி காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று முற்றுகை போராட்டம் ஈடுபட்டு வரும் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

  பின்னர், அதிகாரிகள் ஒரு வாரம் பொறுத்துக் கொள்ளுங்கள் மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.

 இதை எடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். திடீர் முற்றுகைப் போராட்டத்தால் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு காணப்பட்டது.