திமுகவும் விசிகவும் மோதல்! வழக்கு பதியபட்ட நபர் எம்.எல்.ஏ.வுடன் வட்டம்!

 திமுகவும் விசிகவும் மோதல்! வழக்கு பதியபட்ட நபர் எம்.எல்.ஏ.வுடன் வட்டம்!

த.நெல்சன்,

 வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே கடந்த 22 ஆண்டுகளாக விடுதலை சிறுத்தை கட்சிகளின் தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் ஆட்டோ ஸ்டேன்ட் இயங்கி வருகிறது. அதனை இரவோடு இரவாக அப்புறப்படுத்திவிட்டு அந்த இடத்தில் பாலகம் மற்றும் டீக்கடை அமைக்க திமுகவினர் முயன்றனர். இதனை அறிந்த விசிகவினர் ஒன்று கூடி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 இந்நிலையில் திமுக பகுதி செயலாளராக உள்ள சண்முகம் என்பவர் மங்கி குல்லா அணிந்துக் கொண்டு சம்பவத்தில் ஈடுபட்டதை புகைப்பட ஆதாரங்களுடன் மாவட்ட காவல் துறையினரிடம் புகார் அளித்திருக்கிறார்கள்.

 ஆனாலும்  நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாத சூழலில் அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் கண்டனம் தெரிவித்து போஸ்டர்கள் வெளியாகியிருக்கின்றன.

  இது குறித்து விசிகவின் மாநகர செயலாளர் வேலூர் பிலிப் தெரிவிக்கையில், ஜெயா மற்றும் சண்முகம் போன்றவர்கள் நள்ளிரவில் வந்து ஆட்டோ ஸ்டேண்டை ஆக்கிரமிப்பு செய்ய முயன்றனர். அதை தடுத்த தொழிலாளர்கள்  விடுதலை முன்னணி தோழர்களை சாதி ரீதியாக பேசி தாக்குதலில் ஈடுபட முயன்றனர்.

   இந்நிலையில் எங்கள் தரப்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்ட அதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

  ஆனாலும் குற்றவாளிகளை போலீசார் கைது செய்யவில்லை.

இருந்தாலும் கூட வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் நடத்திய சிறுபான்மையினர்களுக்கான நிகழ்ச்சியில் வழக்கு பதியப்பட்ட நபர்கள் பங்கேற்றனர்.

  ஆகவே சாதி ரீதியாக பேசிய அவர்களை கைது செய்ய வேண்டும் என்பதற்காக சட்ட ஆலோசகர் பாஸ்கர் குழுவினருடன் ஆலோசித்து வருகிறோம் என்றார்.

 இந்நிலையில் திமுக மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு வேலூர் சட்டமன்ற உறுப்பினருக்கு போன் போட்டு பேசினாராம். அதில் ஒத்தை நபருக்காக கூட்டணி கட்சியினரிடம் இப்படி மோதலாமா என்று கேள்வி எழுப்பினாராம்.

 வேலூர் பேருந்து நிலையங்களைப் பொறுத்தவரை மாநகராட்சி கடைகளை வாடைகைக்கு எடுத்தவர்களும் சரி திமுக முக்கிய பிரமுகர்களும் சரி நடைபாதையை ஆகிரமித்து பல கடைகளை அனுமதித்து பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறார்கள்.

 சமீபத்தில் கோடு போட்டு தாண்டக்கூடாது என்றெல்லாம் டிராமா போட்டனர். ஆனால் இப்போது மீன்டும் அங்கு தொல்லைதான்.

எல்லாம் பணம்.