எம். எல். ஏ.வின் பெயரை தவறாக பயன்படுத்தும் பஸ் கம்பெனி முதலாளிகள்! கோடி ரூபாய் சொத்தை ஆட்டையை போட திட்டம்!
ம.பா.கெஜராஜ்,
ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வின் பெயரை பயன்படுத்தி சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை பறிக்க முயற்சிகள் நடக்கிறது. ஒரு பஸ் கம்பெனி பிரதர்ஸ் இதற்காக அதிகாரிகளை மிரட்டி வருகிறார்கள்.
இது குறித்த விவரம் வருமாறு,
வேலூர் மாவட்டம், வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே சக்குபாய் என்பவருக்கு பாகப் பிரிவினைச் சொத்து 14 சென்ட் இருந்தது.
தனக்குக் கிடைத்த நிலத்தை ஆறு பிளாட்களாகப் பிரித்து சக்கு பாய் விற்பனை செய்துள்ளார். அந்த வகையில் 1999-ல் ஆறு பிளாட்களில் வெறும் 2 பிளாட்களை மட்டுமே பஸ் கம்பெனி குடும்பத்தினர் கிரையம் பெற்றனர். சிறிது காலம் கழித்து மீதமுள்ள பிளாட்டுகளில் நான்கில் ஒன்றை மட்டும் விட்டு விட்டு 3 பிளாட்களை வாங்கியுள்ளனர்.
எஞ்சியிருக்கும் அந்த ஒரே ஒரு பிளாட் தற்போது அப்துல் கரீம் என்பவரின் பெயரில் சட்டரீதியாக உள்ளது.
அந்த ஒரு பிளாட்டையும் எப்படியாவது அபகரித்துவிட வேண்டும் என்ற நோக்கில் தற்போது அந்த பஸ் கம்பெனி முதலைகள் கிரிமினல் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த டிசம்பர் 16-ம் தேதி, அப்துல் கரீம் அவருடைய இடத்தை சர்வே செய்வதற்காக அரசு முறைப்படி விண்ணப்பித்தார்.
அதன் பேரில் சர்வேயர் கலையரசி என்பவர் அளவீடு செய்ய வந்தபோது, சினிமா பாணியில் அடியாட்களுடன் புகுந்த பஸ் குடும்பத்தினர், டிராக்டர், ஜல்லி கற்கள் மற்றும் பழைய வாகனங்களைக் குவித்து சர்வேயரை பணி செய்யவிடாமல் தடுத்து நிறுத்தினர்.
இந்த நில அபகரிப்பு முயற்சியின் பின்னணியில் ஆளும் திமுக எம் .எல் .ஏ. வின் ஆதரவு பஸ் குடும்பத்திற்கு இருப்பதாகப் பலத்த புகார் எழுந்துள்ளது.
இதன் காரணமாகவே, நிலத்தை அளக்க வந்த அரசு சர்வேயர், அத்துமீறலைத் தட்டிக் கேட்காமல் "மேல் அதிகாரிகளைப் பாருங்கள்" எனக் கூறிவிட்டுத் தப்பி ஓடியுள்ளார்.

இது தொடர்பாக சம்மந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர் அப்துல் கரீம் காவல் துறையிடம் புகார் அளித்திருக்கிறார். ஆனால் அதன் மீது நடவடிக்கை தான் எடுக்கப்படவில்லை,
இந்த நிலையில் புகாரின் அடிப்பட்டையில் எப்.ஐ.ஆர். பதிவு செய்வதவதற்காக மாஜிஸ்திரேட்டு கோர்டை நாட அவர் முயன்று வருகிறார்.
இது ஒருபுறம் இருக்க நிலத்தின் பின்புறம் உள்ள அரசுக்குச் சொந்தமான பொதுக் கால்வாயையும் ஆக்கிரமித்து, இரும்பு கொட்டகை அமைத்து பஸ் குடும்பத்தினர் அவற்றை சொந்த சொத்தை போல பயன்படுத்தி வருகின்றனர்.
நீதிமன்றத்தில் இதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்து நடவடிக்கை கோர அப்துல்கரீம் தரப்பு களம் இறங்கியுள்ளது.
குறிப்பு:- மேற்படி பஸ் குடும்பத்தினர் ஆக்கிரமித்துள்ள கால்வாயில் மழை காலங்களில் ஏற்படும் வெள்ளம் போகும் இடம் தெரியாமல் திக்கு திணறி நெடுஞ்சாலையை நோக்கி பாய்கிறது. இதனால பல கார்கள் விபத்தில் சிக்கியது நினைவு கூறத்தக்கதாகும்.
இதற்கெல்லாம் எம்.எல்.ஏ. என்ன சொல்வாராம்?

admin
