த.வெ.க. விஜய் சினிமாவுக்காக வரிந்து கட்டும் காங்கிரஸ்! கூட்டணிக்கு டாடாவா?

த.வெ.க. விஜய் சினிமாவுக்காக வரிந்து கட்டும் காங்கிரஸ்! கூட்டணிக்கு டாடாவா?

 ம.பா.கெஜராஜ்,

 விஜய்யின் ஜனநாயகம் படம் ரிலீஸ் தொடர்பான சர்ச்சைக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி.மாணிக் தாகூர் வாய்ஸ் கொடுத்திருக்கிறார்.

 அவர் தமது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது

 ஆர்எஸ்எஸ் அமைப்பின் கருத்துக்களைச் பரப்பும் படங்கள் மக்களிடம் எடுபடவில்லை, யாரும் அதை நம்பவும் இல்லை, பார்க்கவும் ஆர்வம் காட்டவில்லை.

இந்தத் தோல்வியைத் துணிச்சலாக எதிர்கொள்ள முடியாத மோடி-ஷா அரசு, இப்போது அதிகாரத்தைப் பயன்படுத்தி சினிமாத் துறையைக் கட்டுப்படுத்தப் பார்க்கிறது.

  இப்போது அவர்களின் இலக்கில் சினிமாத் துறை சிக்கியுள்ளது அதிகாரத்தின் முன்பு கலை மண்டியிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது ஜனநாயகம் நிலைத்திருக்க முடியாது.

  சினிமா மற்றும் கருத்துக்களை கட்டுப்படுத்தும் ஆயுதமாக சென்சார் வாரியம் பயன்படுத்தப்படுகிறது.

  அதே நேரத்தில் பாஜக ஆர்எஸ்எஸ்ன் பிரச்சாரங்கள்  'கலாச்சாரம்' என்ற பெயரில் திணிக்கப்படுகின்றன.

  ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய நிறுவனங்கள் மிரட்டல் கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன. இ.டி., சிபிஐ, ஐடி களைத் தொடர்ந்து தற்போது சென்சார் வாரியம் கூட எதிர்ப்புகளை மௌனமாக பயன்படுத்தப்படுகிறது.

சினிமாவுக்கு அரசியல் அனுமதி தேவையில்லை, சினிமாவுக்கு அரசியல் அமைப்பு பாதுகாப்பு தேவை என்று கூறியுள்ளார்.

  ஏற்கனவே தமிழக அரசியலில் த.வெ.க.வுடன் காங்கிரஸ் இணைய உள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், தற்போது விஜயின் 'ஜன நாயகன்படத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குரல் எழுப்பியுள்ளது புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.