ஒரே பதிவெண்ணில் பல பேருந்துகள்-அதிரடி காட்டிய ஆர்.டி.ஒ!

  ஒரே பதிவெண்ணில் பல பேருந்துகள்-அதிரடி காட்டிய ஆர்.டி.ஒ!

 ஜி.குலசேகரன்,

  திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் - நாட்றம்பள்ளி சாலையில் திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பன்னீர்செல்வம்  வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.

  அப்போது அவ்வழியாக தனியார் சுற்றுலா பேருந்து சென்றதை கண்டு அந்த பதிவெண் குறித்து ஆய்வு செய்துள்ளார்.

  அப்போது அந்த பதிவெண்ணில் ஏற்கனவே கூமாபட்டி பகுதியில் ஒரு தனியார் பேருந்தும், திருவண்ணாமலை ஆர்.டி.ஒ அலுவலகத்தில் ஏற்கனவே பிடிபட்ட பேருந்தும் ஒரே பதிவு எண்ணில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

   பின்னர் தப்பி ஓடிய ஓட்டுனரை தேடி வரும் நிலையில் பேருந்தை பறிமுதல் செய்து ள்ளார். இதே போல கடந்த ஆண்டும் ஏற்கனவே இது போல இரண்டு சுற்றுலா பேருந்துகள் ஒரே பதிவெண்ணில் இருந்த காரணத்தினால் பிடித்து உள்ள நிலையில் தற்போது திருப்பத்தூர் ஆர்.டி.ஒ அலுவலகத்தில் 3 போலி பேருந்துகள் இருப்பது குறிப்பிடதக்கது.