. அமைச்சர்களுடன் தவெக மா.செ. கள்ளத் தொடர்பா?!
அ.கார்த்தீஸ்வரன்,
அரசியலில் புதிய வரவான தமிழக வெற்றி கழகம் உட்கட்சி மோதல்களால் சிக்கித் தவிக்கிறது. விஜய் ரசிகர் மன்றம் ஆரம்பித்த காலத்தில் இருந்து பயணித்த பலர் கட்சி பொறுப்புகளில் புறக்கணிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
அதன் ஒரு பகுதியாகத்தான் போராட்டத்தில் குதித்தார் தூத்துக்குடியைச் சேர்ந்த அஜிதா ஆக்னல்.
தூத்துக்குடியைச் சேர்ந்த அஜிதா ஆக்னல். உழைத்தவர்களுக்கு உரிய மரியாதை இல்லை என பனையூரில் விஜய் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து விபரீத முடிவு எடுத்த அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே மதுரை மாவட்ட செயலாளர் கல்லாணை, சாதி மதம் பார்த்தும், பணம் பெற்றுக் கொண்டும் பதவி வழங்குவதாகவும் திமுக அமைச்சருடன் தொடர்பில் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.
இதேபோல பல புகார்கள் வேலூர், திருவள்ளூர், திண்டுக்கல், காஞ்சிபுரம் என்ன பல மாவட்டங்களில் இதே போல குரல்கள் கேட்கத் தொடங்கி இருக்கும் நிலையில், திமுக வுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு தான் அதிகமான மாவட்டச் செயலாளர்கள் மீது வைக்கப்படுகிறது.
உண்மையில் அவர்கள் திமுக தலைமையுடன் தொடர்பில் இருக்கிறார்களா? அல்லது விஜய் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியா? என தெரியவில்லை.
தேர்தல் நேரத்தில் இது போன்ற நிர்வாகிகள் போர்க் கொடி தூக்கி வருவது தலைவருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக சொல்கின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர்.

admin
