மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் அதிமுக 8 தொகுதிகளில் போட்டி!

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் அதிமுக 8 தொகுதிகளில் போட்டி!

அ.கார்த்தீஸ்வரன்,

 மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் அதிமுக 8 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக விருப்ப மனு நேர்காணலில் எடப்பாடி பழனிசாமி கூறி இருப்பது தெரிய வந்துள்ளது. அதேபோல் தேமுதிக கூட்டணிக்கு வரும் பட்சத்தில் அதன் எண்ணிக்கை குறையலாம் என்றும் கூறி எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

 சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் எடப்பாடி பழனிசாமி மும்முரமாக இருக்கிறார். வழக்கமாக விருப்ப மனு கொடுத்தவர்களிடம் எடப்பாடி பழனிசாமி தனித்தனியாக நேர்காணல் செய்வார். ஆனால் இம்முறை ஏற்கனவே வேட்பாளர் தேர்வு முடிவடைந்துவிட்டதால், மொத்தமாக மாவட்ட வாரி யாக அமர வைத்து நேர்

காணல் செய்து வருகிறார்.

 நேரம் இல்லை என்று காரணம் கூறினாலும், கட்சிக்காக தாங்கள் செய்த விஷயங்களை பட்டியலிட கூட முடியவில்லை என்று அதிமுகவினர் புலம்ப தொடங்கி இருக்கின்றனர்.

 அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் இருந்து விருப்ப மனு கொடுத்தவர்களிடம் எடப்பாடி பழனிசாமி நடத்திய நேர்காணலின் போது நடந்த சம்பவங்கள் தெரியவந்துள்ளன. அந்த நேர்காணலின் போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், வேட்பாளராக யாரை அறி வித்தாலும் அவர்களுக் காக தேர்தல் பணிகளை செய்ய வேண்டும். பழைய மாதிரி தனித்தனியாக நேர்காணல் நடத்த நேரமில்லை.

 தேமுதிக கூட்டணிக்கு வந்தால், 3 தொகுதிகளை கூட்டணிக்கட்சிகளுக்கு ஒதுக்கவும், வரவில்லை என்றால் 2 தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்கப்படும் வாய்ப்புள்ளது. அதனால் அதிமுக 8 தொகுதிகளில் போட்டியிடலாம் என்று தெரிவித்துள்ளார்.

 மதுரை கிழக்கு தொகுதியை பொறுத்த வரை முன்னாள் எம்எல்ஏ தமிழரசன், வழக்கறிஞர் மகேந்திரன், அதிமுக நிர்வாகி ரமேஷ் மற்றும் ஒன்றியச் செயலாளர் ரவி ச்சந்திரன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று அக்கட்சியினர் கூறுகின்றனர்.

  அதேபோல் மதுரை கிழக்கில் செல்லூர் ராஜு, திருமங்கலம் தொகுதியில் ஆர்பி உதயக்குமார், திருப்பரங்குன்றம் தொகுதியில் ராஜன் செல்லப்பா, மதுரை வடக்கு தொகுதியில் சரவணன், முன்னாள் எம்எல்ஏ எஸ் எஸ் சரவணன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியான ஒன்றுதான்.

   இதனால் எந்தெந்த தொகுதிகளில் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.