ஏழைச் சிறுவர்கள் கொண்டாடிய விநாயகர் சதூர்த்தி! போலீஸ் பந்தோபஸ்த் இல்லாத ஊர்வலம்!
ஜி.கே.சேகரன்,
எங்களுக்கு இது தான் விநாயகர்!. இது தான் மேளம் என்று சிறு பிள்ளைகள் உற்சாகத்துடன் கொண்டாடிய விநாயகர் சதுர்த்தி விழாவை பற்றின செய்திதான் இது.
விநாயகர் சதூர்த்தி வந்து விட்டால் நாடு முழுவதும் சிலைவைத்து வழிபடுவதோடு, மேளதாளம், ஆட்டம், பாட்டம் என்று ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகஉடஸ்ன் கொண்டாடுவர்.
இந்த நிலையில் 6 வயது உட்பட 10 க்கும் மேற்பட்ட சிறுவர்கள், திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் கிராமத்தில் களி மண்ணால் தத்ரூபமாக விநாயகர் சிலை செய்து அதற்கு வண்ணம் தீட்டி கொட்டகை போன்று பந்தல் போட்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடினர்.
இதற்காக யாரிடமும் ஒத்தை ரூபாய் கூட வசூலிக்கவில்லை.
நேற்று ஞாயிற்றுக்கிழமை அனைத்து இடங்களிலும் விநாயகர் சிலை கரைப்பதால் அவர்களே கையில் கிடைத்த பிளாஸ்டிக் பொருட்களை வைத்து மேளம் அடித்து உற்சாகமாக விநாயகர் சிலையை வழிபட்டனர்.
பின்னர் எந்தவித போலீஸ் பந்தோபஸ்த் இல்லாமல் சிலையை ஊர்வலமாக கொண்டு சென்று நீரில் கரைத்தனர்.
சிறுவர்கள் செய்த செயலால் சாலையில் செல்பவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியதுடன் அவர்களைச் வாழ்த்தி சென்றனர்.
குறிப்பு:- நாடு முழுவதும் கொண்டாடப்படும் விநாயகர் சதூர்த்தியைக் குறித்து நிதர்சன பதிவு ஒன்று வெளியானது.
அதில், இளைஞர்கள் சிலர் இணைந்து ஒரு லட்சம் ரூபாய் வசூல் செய்வார்கள். பின்னர் அதில் மேளம், ஆடல் பாடல் நிகழ்ச்சி, அன்னதானம், அலங்கார விளக்குகள், ஊர்வலம், வாகனசெலவு எல்லாம் போக மீதம் 500 ரூபாய் இருக்கும் அதில் விநாயகர் சிலை வாங்கிடலாம் என்று முடிவெடுத்ததாக சொல்லியிருப்பார்கள்.