காஞ்சன கிரி மலையை ஏலகிரி போல் சுற்றுலா தளமாக மாற்ற கோரிக்கை!

கு.அசோக்,
அதிகம் நெல் பயிரிடும் பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் - சிப்காட் குரோமியம் கழிவுகளை முழுவதுமாக அரசு அகற்ற வேண்டும் சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்கும் தொழிற்சாலைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் மாநாட்டில் தீர்மானம்
இராணிப்பேட்டைமாவட்டம்,ரத்தினகிரி சமத்துவ நகர் பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட மாநாடு வாலாஜா வட்டத்தலைவர் ஏழுமலை தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர் எல்.சி மணி உள்ளிட்ட திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.
இம்மாநாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறந்து விவசாயிகள் பயனடையும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், பவர் கிரீட் உயர் மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் முழு இழப்பீடு அளிக்க முத்தரப்பு பேச்சு வார்த்தையை நடத்த வேண்டும்.
சிப்காட்டில் உள்ள குரோமிய தொழிற்சாலை குரோமிய கழிவுகளை அகற்றி சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டும் நவ்லாக் பகுதியில் அரசு கல்லூரி அமைக்க வேண்டும் புதுப்பாடி அணையை விரைந்து புணரமைக்க வேண்டும் காஞ்சன கிரி மலையை ஏலகிரி போல் சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும்,
சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்கும் தொழிற்சாலைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.