ஆல்கஹாலுக்கு ஓகே...! கள்ளுக்கு தடையா?

ஆல்கஹாலுக்கு ஓகே...! கள்ளுக்கு தடையா?

கு.அசோக்,

கள் இயக்கம் சார்பில் கள் விடுதலை என்ற பெயரில் திருச்சியில் டிசம்பர் மாதம் மாநாடு பீகார் முதல்வர் பங்கேற்பு- 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கள் இயக்கம் ஆட்சி மாற்றத்திற்கு வித்திடும்  -இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி

 வேலூர்மாவட்டம், சத்துவாச்சாரியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளரும் கள் இயக்க ஒருங்கிணைப்பாளருமான நல்லசாமி செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

   கள் இறக்க பருக இந்திய அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்துள்ள உணவு தேடல் கள் பற்றிய புரிதல் அரசியல் கட்சி தலைவர்களுக்கு இல்லை.

  போதை பொருள் வேறு கள் வேறு ராஜ போதை அபின் பேத்தமைடைன்,கஞ்சா,மது ரம் விஸ்கி போன்றவைகளும் போதை.

    ஆனால் கள் உணவு பொருள் அரசியல் அமைப்பும் அவ்வாறு தான் கூறுகிறது. இந்த செயல் அரசியல் அமைப்பை அவமதிக்கும் செயல் ஒரு அநீதி.

  கருணாநிதி ஜெயலலிதா,ஓபி.எஸ்.,இபிஎஸ்,ஸ்டாலின் ஆகியோர் இருக்கும் போது சென்னையில் அஸ்வமேத யாகம் நடத்தினோம் ஆனால் கள் போதை பொருள் என நிருபித்தால் வெற்றி பெற்றவருக்கு 10 கோடி பரிசு என அறிவித்தோம்.

    ஆனால் யாரும் அதனை நிருபிக்க வரவில்லை தமிழ்நாட்டில் 38 ஆண்டுகளாக ஏழரை கோடி மக்கள் நாங்கள் செம்மறி ஆடுகளாக இருக்கிறோம்.

    ஆனால் ஆட்சியாளர்கள் ஓநாய்களாக வேட்டையாடுகின்றனர்.

  அரசியல் அமைப்பு சட்டத்தை ஏற்று மதித்து கள் இறக்குபவர் குற்றவாளியா அல்லது அவர்கள் மீது வழக்கு போடும் அரசு குற்றவாளியா அரசு தான் குற்றவாளி கள் இறக்க போராடுபவர் அல்ல.

   வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கள் ஆட்சிமாற்றத்தை கட்டாயம் ஏற்படுத்தும் பல ஆண்டுகளுக்கு பிறகு நான்கு மாநில தேர்தலில் வெங்காய விலை வெற்றி தோல்வியை நிர்ணயித்தை போல் கள் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும்.

   பீகாரை போல் தமிழகத்திலும் முழு மதுவிலக்கை கொண்டு வரவேண்டும் அங்கு பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் அரசு நஷ்ட ஈடு வழங்குவதில்லை ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தான் கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் இழப்பீட்டை அரசு வாரி வழங்குகிறது.

   பீகாரில் குற்றங்கள் குறைந்து அமைதி நிலவுகிறது கள்ளச்சாராயம் உற்பத்தியை பீகார் அரசு சொல்லியது கள்ளக்குறிச்சி விக்கிரவாண்டியில் இறந்தவர்களுக்கு வாரி வாரி வழங்கினார்கள்.

  தமிழக அரசு மதுவை நோக்கி இருக்கிறது இதனை விளக்கும் வகையில் டிசம்பர் மாதம் கள் விடுதலை மாநாட்டை திருச்சியில் நடத்தவுள்ளோம்.

   இதில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கலந்து கொள்ளவுள்ளார் போதை பொருட்களால் பள்ளி கல்லூரி மாணவர்கள் பாதிக்கபடுவதை தமிழக அரசு தடுத்துள்ளதாக கூறுகிறார்கள்.

  ஆனால் அரசு அதை தடுக்கவே இல்லை, இதே வேலூரில் போதை பொருட்கள் கிடைக்கிறது.  மதுவை அரசாங்கம் விற்கிறது.

 இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமே கள்-ளை உணவு பட்டியலில் வைத்துள்ளது ஆனால் தமிழக மக்களுக்கு அநீதி இழைத்து கொண்டிருக்கிறது  

 கள்ளில் ஆக்கஹால் இருக்கிறது குறைந்த அளவு ஆனால் டாஸ்மாக்கில் 42 சதவிகிதம் ஆக்கஹால் உள்ளது அதற்கு தடையில்லை ஆனால் கள்ளுக்கு தடை என கூறினார்.