அல்கொய்தா வைத்த 1 லட்சம் டாலர் பரிசு! நபிகளை  கார்ட்டூனாக வரைந்தவர் சாலை விபத்தில் மரணம்!

அல்கொய்தா வைத்த 1 லட்சம் டாலர் பரிசு! நபிகளை  கார்ட்டூனாக வரைந்தவர் சாலை விபத்தில் மரணம்!

ஆ.கவுசர்,

   நபிகள் நாயகத்தை கார்ட்டூனாக வரைந்த ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த லார்ஸ் வில்க்ஸ் சாலை விபத்தில் மரணமடைந்ததாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

  முகமது நபியின் கார்ட்டூன்களை லார்ஸ் வில்க்ஸ் என்பவர் கார்ட்டூனாக வரைந்தார்.

  இதற்கு இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக அல்கொய்தா இயக்கம் அவரது உயிருக்கு 1 லட்சம் டாலர் வெகுமதி அளிப்பதாக அறிவித்திருந்தது.

 எனவே வில்க்ஸிக்கு எப்போதுமே போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 இந்நிலையில் அவர் காவல்துறை வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது ஒரு ட்ரக்கில் மோதி விபத்து நடந்ததாகத் செய்திகள் தெரிவிக்கின்றன.ஸ்

 இந்த விபத்தில் அவருடன் சென்று கொண்டிருந்த இரு காவலர்களும் உயிரிழந்தனர்.

  இந்த விபத்துக்கு சதி ஏதேனும் காரணமாக இருக்குமோ என்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

  2007-ஆம் ஆண்டில் மேற்படி கார்ட்டூன் வரையப்பட்டு டென்மார்க் செய்தித்தாள் ஒன்றில் வெளியானது.இதனால் உலகம் முழுவதும் இஸ்லாமியர் எதிர்ப்புத் தெரிவித்தனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.