கொலைகளாமாக மாறிவரும் வேலூர் அரசு மருத்துவமனை!

கொலைகளாமாக மாறிவரும் வேலூர் அரசு மருத்துவமனை!

ஜி.கே.சேகரன்,

  வேலூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சையில் மருத்துவர்கள் யாரும் இல்லாததால் முகம் சிதைந்த நிலையில் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக மருத்துவம் பார்க்காத அவல நிலை. மூன்று மணி நேரத்துக்குப் பிறகு மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின் ஸ்கேன் செய்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனை அலட்சியத்தால் மூன்று மணி நேரத்துக்கு பிறகு உயிர் பிழைப்பது கடினம் என தெரிவித்த மருத்துவர்கள் - சோகத்தில் ஆழ்ந்த உறவினர்கள்.

   இராணிப்பேட்டை மாவட்டம்,  கலவை நல்லூர் பகுதியை சேர்ந்த ரத்தினம் சுசிலா இவர்களுக்கு மூன்று மகள் மற்றும் உதயகுமார் (35) என்ற மகன் உள்ளனர். இவருக்கு திருமணம் ஆகி 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

  இந்நிலையில் உதயகுமார் இராணிப்பேட்டை நீதிமன்றம் அருகே உள்ள (பேரி) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

   இவர் நேற்று முன் தினம் இரவு பணியை முடித்துக் கொண்டு அவரது இருசக்கர வாகனத்தில் கலவையில் உள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

  அப்போது நாகநரி பகுதியில் உள்ள வளைவில் வந்த நெல் பயிர்களை அறுவடை செய்யும் இயந்திரம் வாகனம் வளைவு பாதையில் வேகமாக வந்துள்ளது.

   அதில் முன்பு மோதிய உதயகுமாரின் முகம் முழுவதும் சிதைந்து போய் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்து உள்ளார்.

   பின்பு அங்கிருந்த பொதுமக்கள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸை வரவைத்து கலவை அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில். கலவை மருத்துவமனையில் போதிய சிகிச்சை அளிக்க முடியாத காரணத்தால் மேல் சிகிச்சைக்காக வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா.

  இரவு அரசு மருத்துவமனையில் உள்ள அவசரப் பிரிவில் முதலுதவி அளிப்பதாக முகம் முழுவதும் பஞ்சியை வைத்து கட்டு போட்டுவிட்டு ஆக்சிஜன் பொருத்திவிட்டு முறையாக செய்யாமல் சென்றுள்ளனர்.

  பின்பு பல மணி ஆகியும் அதாவது  மூன்று மணி நேரத்துக்கு மேலாக எந்த செவிலியர்களும் மருத்துவர்களும் யாரும் வந்து பார்க்கவில்லை.

   அவசர பிரிவில் ஒரு மருத்துவரும் இல்லாததால் மிகவும் அவதி அடைந்து வந்துள்ளனர்.

ஒரு அவசர சிகிச்சை அறையில் இது போன்ற நிலை இருந்தால் சிகிச்சை பெற்று வரும் நபரின் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும் அபாயம் இருப்பதாக அச்சம் அடைந்துள்ளனர்.

 https://livelook.in/Teen-tries-to-deal-with-MLA-by-lying-Sensational-raid-at-Vellore-Hospital

 மருத்துவம் பார்க்க போதிய பண வசதி இல்லாததால் அரசு மருத்துவமனையை நம்பி வருகிறோம் ஆனால் தரமற்ற முறையில் இருப்பதால் எப்படி நம்பி அரசு மருத்துவமனை நம்பி வருவது என வேதனையுடன் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பி உள்ளனர்.

 இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் மருத்துவமனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கேட்டபோது அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை அறையில் போதிய படுக்கை வசதி இல்லாததால் மற்றொரு அவசர பிரிவு அறையில் வைக்கப்பட்டு உள்ளது,

 ஆகவேதான், இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது எனவும் போதிய மருத்துவர்கள் இல்லாததால் தாமதம் ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.

 அதேபோன்று அவருக்கு ஸ்கேன் செய்ய வேண்டும்,சிகிச்சை பெற்று வரும் நபரை ஸ்கேன் செய்யும் அறைக்கு கொண்டு செல்ல வேண்டும் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஆக்சிஜன் பொருத்தப்பட்டுள்ளது.

 அதை எடுத்தால் அவருக்கு மாரடைப்பு ஏற்படலாம் என பயம் கொடுக்கும் வகையில் சம்பந்தமில்லாமல் கூறப்பட்டதாக தெரிகிறது.

 வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்பு ஸ்கேன் செய்து முகம் முழுவதும் சிதைந்து இருப்பதால் இங்கு சிகிச்சை அளிக்க முடியாது உயிர் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுப்பி வைக்கிறோம்.

 அங்கு சென்று மருத்துவம் பார்த்துக் கொள்ளுங்கள் என அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். 

  மருத்துவமனைக்கு வந்தவுடன் தெரிவித்திருந்தால் உடனடியாக சென்னைக்கு சென்று இருந்திருக்கலாம் என உறவினர்கள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.

   இது போன்ற சிரமங்களை வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிலர் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார்கள். இதனால் சிகிவ்ச்சைக்கு வரும் ஏழைகள் இறப்பை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இது குறித்து அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமாரின் பார்வைக்கு சென்ற பின்னர் அவர் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று விசாரித்து டீனிடம் எடுத்துரைத்தார்.

    அப்போது அந்த டீன் சட்டமன்ற உறுப்பினரை திர்சை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டாரே தவிர அவர் சொன்ன குறைகளை சீர் செய்து கொள்ளவேயில்லை. அதன் வெளிபாடே இகலவை வாலிபருக்கு ஏற்பட்டு நிலை.