எம். எல். ஏ.விடம் பொய் சொல்லி சமாளிக்கமுயன்ற டீன்! வேலூர் மருத்துவமனையில் பரபரப்பு சோதனை!
கு.அசோக்,
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் திடீர் ஆய்வு நடத்தினார். இரவில் நோயாளிகள் பாதிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் இருந்து சிகிச்சை அளிக்க வேண்டுமென மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வரிடம் வலியுறுத்தல்.
வேலூர்மாவட்டம், வேலூர் அடுக்கம்பாறையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இதில் இரவில் வரும் நோயாளிகளை மருத்துவர்கள் கவணிப்பதில்லை. குறிப்பாக மருத்துவர்கள் இருப்பதில்லை என தொடர்ந்து அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமாருக்கு புகார் வந்தது.
நேற்று முன் தினம் இது போன்று புகார் வந்ததால், அவர் இரவே மருத்துவக்கல்லூரி முதல்வரை செல்போனில் தொடர்பு கொண்டார், அது நாட் ரீச்சபலாக இருந்தது.
எனவே அவர் ஆஸ்பத்திரியில் புகார் சொன்ன நோயாளியின் செல் போனுக்கு அழைப்புவிடுத்து அங்குள்ள செவிலியாரிடம் போனை கொடுக்கச் சொன்னார். ஆனால்க் நோயாளியின் செல்போனை செவிலியர்கள் வாங்க மறுத்துவிட்டனர்.
அப்போது போனை இரவு பணி மருத்துவரிடம் கொடுக்க சொல்லியுள்ளார். அதற்கு மறுமுனையில் மருத்துவர்கள் இல்லை என்று பதிலளித்துள்ளார்.
இம்மருத்துவமனையில் நோயாளிகள் பாதிக்கப்படுவதாக புகார் வந்ததன் அடிப்படையில் எம்.எல்.ஏ நந்தகுமார் திடீரென மருத்துவமனையில் ஆய்வு செய்தா£.¢ நோயாளிகளிடம் குறைகளையும் கேட்டார் பின்னர் அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்று அங்கும் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளிடம் விசாரணை மேற்கொண்டார்.
மேலும் அங்கு வந்த கல்லூரியின் முதல்வரிடம் நோயாளிகள் இரவில் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சைக்கு வந்தால் டாக்டர்களும் இருப்பதில்லை நேற்றிரவு இதே போன்று இரண்டு பேருக்கு வெண்டிலேட்டர் வைக்க வேண்டிய நோயாளிகள் வந்தும் செவிலியர்களும் அலட்சியமாக இருந்துள்ளனர்.
மேலும் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் உங்களை தொடர்பு கொள்ள முயன்றாலும் நீங்களும் போனை எடுக்கவில்லை நர்சுகளும் போனை வாங்க மறுக்கின்றனர் டாக்டர்களுமில்லை இதனால் நோயாளிகள் தான் பாதிக்கபடுகின்றனர்.
இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்க கூடாது என கடிந்துகொண்டார். தவறை உணர்ந்தும் கூட கல்லூரி முதல்வர் சட்டமன்ற உறுப்பினரிடம் பொய் சொல்லி சமாளிக்கப்பார்த்தார்.
சட்டமன்ற உறுப்பினருக்கே இந்த கதி என்றால், சாமான்யர்களுக்கு என்ன நிலைமை என்பதை மக்களே புரிந்துக் கொள்வார்கள்.
எது எப்படியோ சட்டமன்ற உறுப்பினரின் திடீர் ஆய்வால் மருத்துவமனையில் பரபரப்பு காணப்பட்டது.