திடீரென பாசம் காட்டும் வாணியம்பாடி எம். எல் .ஏ.!

 திடீரென பாசம் காட்டும் வாணியம்பாடி எம். எல் .ஏ.!

ஜி.கே.சேகரன்,

வாணியம்பாடி மற்றும் இராணிப்பேட்டை அருகே மழை நீர் தெருக்களில்,வீடுகளிலும் மருத்துவமனையிலும் தேங்கி நிற்பதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டத்திற்கு உட்பட்ட வேலம், இந்திரா நகர் பகுதியில் நேற்று இரவு பெய்த திடீர் கனமழைக்கு தெருக்களில் மழைநீருடன் கழிவு நீர் கால்வாய்களில் கலந்து தெருக்களில் தேங்கி பலமணி நேரம் வடியாததால் ஆத்திரமடைந்த பகுதி மக்கள் சோளிங்கர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

  வேலம் இந்திராநகர் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக மழைக்காலங்களில் தெருக்களில், கழிவுநீர் கால்வாயுடன் கலந்து மழை நீர் தேங்கி நிற்கிறது.

  இது தொடர்பாக வேலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் முனுசாமி இடம் பலமுறை அப்பகுதி மக்கள் முறையான கால்வாய் வசதி ஏற்படுத்தி தரவில்லை என்பதால் மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

  அதே போல் வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் தேங்கி நிற்கும் மழை வெள்ளம் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள்கடும் அவதி. அரசு அதிகாரிகள் செயல்படாமல் மெத்தன போக்காக செயல்படுவதால் பொதுமக்கள் அவதி உறுவதாக வாணியம்பாடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் பகிரங்க குற்றச்சாட்டு வைத்தார்.

  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்  நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில்  கழிவுநீருடன் மழை நீர் தேங்கி நிற்பதால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் குளம் போல் மழை வெள்ளம் தேங்கி நிற்கிறது.

  இதனால் நோயாளிகள் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வரும் நிலையில் அரசு மருத்துவமனையை நேரில் பார்வையிட்ட வாணியம்பாடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக செயல்படாமல் ஏரி கால்வாய் ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றவில்லை, அதை செய்ய வேண்டும் என்று குற்றம் சாட்டினார்.