அதிமுக ஆட்சியில் ஒரு நயா பைசா கூட தூய்மை பணியாளர்கள் நலவாரியத்திற்கு ஒதுக்கபடவில்லை! வாரிய தலைவர் பேட்டி! ஆர்பாட்டம்...!

ஜி.கே.சேகரன்,
கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் ஒரு நயா பைசா கூட தூய்மை பணியாளர்கள் நலவாரியத்திற்கு ஒதுக்கபடவில்லை - திமுக ஆட்சியில் இதுவரையில் 45 கோடி ஒதுக்கப்பட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளோம் - திருப்பத்தூரில் தூய்மை பணியாளர்களுக்கான கூட்டத்தில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் நலவாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுசாமி பேட்டி.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில், ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி . ஆறுசாமி கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்
பின்னர் செய்தியாளர்களிடம் தூய்மை பணியாளர்நலவாரிய தலைவர் திப்பம் பட்டி ஆறுசாமி கூறுகையில் பல்வேறு நலத்திட்டங்களை இங்கும் வழங்கினோம். ஆட்சியர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி 200 பேருக்கு நலவாரிய அட்டைகளையும் வழங்கினோம்.
இம்மாவட்டத்தில் ரூ.1 கோடிக்கு மேலாக தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் 48 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் திருமணம் கல்வி மற்றும் கண் சிகிச்சைக்கு நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனை நல்ல முறையில் பயன்படுத்தி தூய்மை பணியாளர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திகொள்ள வேண்டும்.
அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் ஒரு நயா பைசா கூட ஒதுக்கபடவில்லை, மாறாக 2021 ஆம் ஆண்டு வாரியத்திற்கு ஆண்டுக்கு பல கோடி ஒதுக்கி இதுவரையில் 45 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் முழுமையாக வாரிய பலன் கள் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு போய் சேரும். 3.20 லட்சம் பேர் இப்போது வாரிய உறுப்பினர்களாக உள்ளனர். தனியார் உணவு விடுதி மருத்துவமனைகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களையும் நலவாரியத்தில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுவோம்.
10 லட்சம் வரையில் உறுப்பினர்களை சேர்ப்போம் மேலும் தூய்மை பணியாளர்களுக்கு மாதம் ஒரு நாள் தூய்மை பணியாளர் கூட்டம் நடத்த கேட்டோம்.
வரும் வெள்ளிகிழமை முதல் தூய்மை பணியாளர் குறைதீர்வு கூட்டம் நடத்தபடும் என ஆட்சியர் சொல்லியிருக்கிறார் தூய்மை பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் சம நீதி கிடைக்க முயற்சி செய்வோம் என கூறினார்.
வேலூர் மாவட்டம்,
தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் குறைவாக இருப்பது குறித்து முதல்வரின் கவணத்திற்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும் - வேலூர் மாவட்டத்திற்கு மலக்குழிகளை சுத்தம் செய்ய 6 ரோபோடிக் இயந்திரங்கள் வழங்கப்படும் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நலவாரிய தலைவர் டாக்டர் திப்பம்பட்டி ஆறுச்சாமி பேட்டி
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நலவாரிய தலைவர் டாக்டர் திப்பம் பட்டி ஆறுச்சாமி தூய்மை பணியாளர்களும் குறைகளை கேட்டறியும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் நடைபெற்ற இதில் திரளான தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டு தங்களுக்கு மாதம், 5 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுவதாகவும் இது மிகவும் குறைந்த அளவில் உள்ளதால் குடும்பம் நடத்த முடியவில்லை அதனை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கேட்டனர்.
மேலும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் தூய்மை பணியில் ஈடுபடும் தங்களுக்கு உபகரணங்கள் வழங்கபடுவதில்லை உபகரணங்கள் வழங்கினால் தான் பாதுகாப்பு கையுறை உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும் அப்போது தான் எங்களுக்கும் பாதுகாப்பு முதல்வர் தேர்தல் காலத்தில் சொன்னதை போல் எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் கொரோனா காலத்தில் வழங்கபடுவதாக அறிவித்த ஊக்கத்தொகை இன்னும் வழங்கவில்லை போன்ற பல்வேறு குறைகளை எடுத்து கூறினார்கள்
பின்னர் நலவாரிய தலைவர் ஆறுசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில் இம்மாவட்டத்தில் மலக்குழிகளில் மனிதன் இறங்குவதை தடுக்க ஒரு இயந்திரம் 60 லட்சம் மதிப்பில் 6 ரோபோடிக் இயந்திரங்கள் வழங்கப்படும்.
இதன் மதிப்பு ரூ.3.60 கோடியாகும் ஊதியம் மிககுறைவாக இருக்கிறது என்பது உண்மை தான் இதுகுறித்து தமிழக முதல்வரின் கவணத்திற்கு கொண்டு சென்று தற்போது 5 ஆயிரம் வழங்கபடுவதை ரூ.7500 ஆக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுப்பேன்.
மாதத்தில் ஒரு நாள் தூய்மை பணியாளர்கள் குறைதீர்வு கூட்டத்தை நடத்த கூறினேன் ஒப்பு கொண்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் பாதுகாப்பு உபகரணங்களை தூய்மை பணியாளர்களுக்கு வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.
ஆர்பாட்டம்.
வாரிய தலைவர் வருகை புரிந்த நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சியில் பணியாற்றும் 30 வார்டுகளுக்கு 160 மேற்பட்டோர் தூய்மை பணியாளர்களாக ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட சிலருக்கு கடந்த 40 நாள் ஊதியம் வழங்காததை கண்டித்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் ஆற்காடு நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் கூலியில் முறைகேடு புகார் காரணமாக லஞ்ச ஒழிப்பு துறையினர் ஆற்காடு நகராட்சியில் சோதனை செய்து கணக்கில் வராத ரூ.70 ஆயிரம் பணத்தை கைப்பற்றிய நிலையில் தற்போது ஊதியம் வழங்கவில்லை என தூய்மை பணியாளர்கள் முற்றுகை மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.