ஆணவப் படுகொலைகளை தடுக்க தனி சட்டத்துக்கு வாய்ப்பிருக்கலாம்!அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

ஆணவப் படுகொலைகளை தடுக்க தனி சட்டத்துக்கு வாய்ப்பிருக்கலாம்!அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

 ஜி.கே.சேகரன்,

ஆணவப்படுகொலைகளை தடுக்க தனி சட்டம் கொண்டு வர வாய்ப்பிருக்கலாம் என அமைச்சர் துரை முருகன் பேட்டி

 வேலூர்மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.

   மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி தலைமையில் நடந்த இவ்விழாவில் மேயர் சுஜாதா,துணை மேயர் சுனில், மாநகராட்சியின்  மண்டல குழுதலைவர் புஷ்பலதா வன்னியராஜா உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா குடும்ப அட்டைகள் பல்வேறு சான்றுகளையும் நலத்திட்டங்களையும் வழங்கினார்

  பின்னர் விழாவில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் இன்றைக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடக்கிறது, இதே போன்று காட்பாடி தொகுதியில் உள்ள 18 வார்டுகளிலும் நடக்கும்.

  கலைஞர் உரிமை தொகை முதல்வர் அறிவித்தார் பெண்களுக்கு சலுகை செய்தோம், பெண்கள் இலவச பேருந்து பயணம் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் கலைஞர் உரிமை தொகை மாதம் 1000 மகளிர்களுக்கு வழங்குகிறோம்.

  இதில் வரவேற்பு இருப்பதால் தமிழகம் முழுவதும் இதனை பயன்படுத்தினோம், மக்கள் முதலில் அவ நம்பிக்கையுடன் வாங்கினார்கள், ஆனால் இப்போது எல்லா பெண்களுக்கும் மாதம் 1000 தரும் திட்டம் நிச்சயமாக அமுல்படுத்தபடும்.

  மகளிர் உரிமை தொகை விண்ணப்படிவம் கிடைக்கவில்லை என துணைமேயர் சொன்னார் காரணம் சில நேரங்களில் அதிகாரிகளுக்கே விவரம் தெரியவில்லை. நீங்கள் படிவத்தை பூர்த்தி செய்து அதனை மக்களிடமிருந்து வாங்கி கொடுத்தால் தான் நாங்கள் அதனை மேலே அனுப்புவோம்.

  கையில் எழுதுதோ படிவத்தை ஜெகராக்ஸ் எடுப்பதோ செல்லாது. ஆகையால் யார் யாருக்கு கிடைக்கவில்லையோ அவர்கள் கவலைப்பட வேண்டாம் மீண்டும் யார் யாருக்கு கிடைக்கவில்லை என பார்க்கிறோம் எங்கள் அதிகாரிகள் போகிற போது ஒரு வீட்டிற்கு போவார்கள் ஆனால் அந்த வீட்டினுள் பலர் இருப்பார்கள் நான் மாவட்ட ஆட்சியரை படிவங்களை கொடுக்க சொல்கிறேன், படிவம் கிடைக்கவில்லை என்றால் சொல்லுங்கள் நானே உடன் இருந்து படிவத்தை பெற்றுதருகிறேன்.

  எங்களுடைய நோக்கம் ரூ.1000 தருவது மட்டுமல்ல உங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம் ஒரு முப்பது ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் வசித்து வீடு கட்டியிருப்பார் வரியும் கட்டுவார் ஆனால் பட்டா இருக்காது அவர்கள் சொல்லுவார்கள் நான் சர்காருக்கு வரி கட்டுகிறேன் மின் இணைப்பு இருக்கிறது ஏன் பட்டாகொடுக்கவில்லை என கேட்பார்கள்.

  அது நீர் புறம்போக்கு மேய்ச்சல் புறம்போக்கு அல்லது திருக்கோவில் நிலமாக இருக்கலாம் அவர்களுக்கு எல்லாம் பட்டா மாற்றி தர போகிறோம்.

  அது மட்டுமின்றி அனைத்து சலுகைகளையும் இங்கேயே செய்து தருகிறோம்  பட்டாகேட்டு காத்திருப்போம், ஆனால் இப்போது அப்படியல்ல நீங்கள் கோரிக்கை வைத்து வருத்தம் ஏற்படுத்த விரும்பவில்லை இந்த திட்டத்தை நீங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் காட்பாடியில் நான் சொன்னவை அகைகளையும்  செய்திருக்கிறேன்.

   பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் கும்ப கோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் துவங்குவதற்கு ஆலுநர் ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார், அதனை வழக்கத்திற்கு மாறாக கவர்னர் அனுப்பியுள்ளார் குடியரசு தலைவரும் உச்சநீதிமன்றத்தை கேட்டுள்ளார் 4ஆண்டுகளில் எத்தனை தடுப்பணை கட்டியுள்ளேன் என அன்புமணிராமதாசின் கேள்விக்கு அறிக்கை அளித்துள்ளேன் விவரமாக கலைஞர் துவங்கி ஸ்டாலின் காலம் வரையில் கட்டியுள்ள அணைகளை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளேன்.

  திமுகவில் நான் ஒதுக்கபடுகிறேனா இல்லையா என்பதை நான் தான் சொல்ல வேண்டும் அவர், அவருடைய அப்பாவுக்கு சொன்னால் போதும்.

   பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும்  எங்கள் கொள்கை வேறு அவர்கள் கொள்கை வேறு என எடப்பாடி பழனிசாமி கூறுவது பற்றி கேட்டதற்கு அவர் சொன்னால் எனக்கு என்ன என கூறினார் திமுக அதிமுக கொண்டு வந்த திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதாக எடப்பாடி கூறுகிறாரே என்ற கேள்விக்கு மகளிர் உதவித்தொகை உங்களுடன் ஸ்டாலின் இந்த திட்டங்கள் எல்லாம் எங்களுடைய திட்டம்.

  ஆணவ படுகொலை தடுப்பது குறித்து  சட்டங்கள் இயற்ற முதல்வர் தான் சொல்ல வேண்டும் அமைச்சரவை ஆணவ படுகொலை தடுக்க சட்டம் இயற்ற வாய்ப்பு இருக்கலாம் என்று சொன்னார்.