அம்பேத்கர் சிலைகளுக்கு மரியாதை:- அப்படின்னா என்ன பண்ண போகிறார் நடிகர் விஜய்!

அம்பேத்கர் சிலைகளுக்கு மரியாதை:- அப்படின்னா என்ன பண்ண போகிறார் நடிகர் விஜய்!

 உ.சசிக்குமார்,

 நடிகர் விஜய் பெயரில் செயல்பட்டுவரும் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஏற்கனவே நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 51 பேர் வெற்றி பெற்ற நிலையில், நாளை 14.04.2023 அன்று அம்பேத்கர் பிறந்தநாளை நாடெங்கும் கடைபிடிக்கிறார்கள்.

  இந்நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுக்கு மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மெஸேஜ் மூலமாக தெரிவித்துள்ளதோடு,  தொலைபேசியின் வாயிலாக தொடர்புகொண்டு ஆலோசனையும் வழங்கப்பட்டது.

 அதே போல், அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 மேலும், வருகிற 15ம் தேதி முதல் மே மாதம் வரை மாவட்டம் வாரியாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது என்றும் இதன் மூலம் மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

 இதெல்லாம் விஜய் நாலேஜ் இல்லாமல் செய்யப்பட வாய்ப்பு இல்லை. அப்படின்னா என்ன பண்ண போகிறார் நடிகர் விஜய்?