செங்கோட்டையன் அதிமுகவுக்கு முழுக்கா? 5 ஆம் தேதி என்ன சொல்லப்போகிறார்!

செங்கோட்டையன் அதிமுகவுக்கு முழுக்கா? 5 ஆம் தேதி என்ன சொல்லப்போகிறார்!

ம.பா.கெஜராஜ்,

 அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், 5-ந்தேதி மனம் திறந்து பேசப்போகிறேன் என்று தெரிவித்துள்ளார். அப்படியிருக்க அவர் அதிமுகவில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக தகவல்கள்.

 அப்படி அவர் வெளியேறினால் பாஜகவில் இணையக்கூடும் என்றும், திமுக அல்லது தவெகவில் இணையக்கூடும் என்று பேசப்படுகிறது.

* அதிமுகவின் மிக மூத்த தலைவர்களில் செங்கோட்டையனும் ஒருவர். அவர்,எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே செங்கோட்டையன் அதிமுகவில் பயணிக்கிறார்.

* அதிமுகவில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்த செந்தில் பாலாஜி கொங்கு மாவட்டங்களின் பொறுப்பாளராக செயல்பட்டு வருகிறார்.

* ஒருவேளை செங்கோட்டையன் திமுகவில் இணைந்தால் அவரை விட ஜுனியரான செந்தில் பாலாஜியின் கீழ் செயல்படவேண்டிய நெருக்கடி ஏற்பட  வாய்ப்புள்ளது

* ஆதலால் செங்கோட்டையன் திமுகவில் இணைவதற்கான வாய்ப்பு மிக குறைவே.

* அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாவதற்கு முன்பே டெல்லி வரை சென்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சந்தித்து பேசினார்.

* அதிமுக - பாஜக கூட்டணி உறுதியான பின்பு செங்கோட்டையனுக்கு, கட்சியில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் படிப்படியாகக் குறைக்கப்பட்டது.

* அதிமுக - பாஜக கூட்டணி இல்லையென்றால் கூட செங்கோட்டையன் பாஜகவில் இணைவதற்கு சாத்தியம் இருந்திருக்கும்.

* ஆகவே கூட்டணியால் இப்போது பாஜகவிற்கு செங்கோட்டையன் செல்ல வாய்ப்பு மிக மிக குறைவே, அதற்கு அவர் அதிமுகவிலேயே இருந்துவிடலாம்

* செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினால், திமுக, அதிமுகவை மீறிப் பிரகாசிப்பது கடினம், ஆதலால் அந்த முடிவை செங்கோட்டையன் எடுப்பதற்கான வாய்ப்பு இல்லை.

 *வளர்ந்து வரும் கட்சியாக உள்ள த.வெ.க.வில் செங்கோட்டையன் இணைந்து பயணிக்க வாய்ப்புள்ளது.

  எதற்கும் வரும் 5 ஆம் தேதி வரை காத்திருப்போம்.