பத்தே மாதங்களில் 59 குழந்தை திருமணங்கள்! 415 டீன் ஏஜ் பிரசவம்! முதலிடத்தில் அணைக்கட்டு!
ம.பா.கெஜராஜ்,
வேலூர் மாவட்டத்தில பத்தே மாதங்களில் 59 குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளன. அதே போல் 415 சிறுமிகள் குழந்தை பெற்றுள்ளனர்; 201 போக்சோ வழக்குகள் பதிவாகியிருப்பதாக அரசு அதிகாரிகளே தெரிவித்திருப்பது அவர்களின் இயலாமையை வெளிப்படுத்துவதாக உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த பத்து மாதங்களில் (ஜனவரி 2025 முதல் அக்டோபர் 2025 வரை) 18 வயதுக்குட்பட்ட 415 சிறுமிகளுக்குக் குழந்தை பிறந்துள்ளது என்ற பேரதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தகவல்கள், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களின் ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளன.
415 டீன் ஏஜ் தாய்மார்கள்
வெறும் 10 மாதங்களில் 415 சிறுமிகள் தாய்மார்களாக மாறி உள்ளனர். இவர்களில் பலர் பள்ளிப் படிப்பைக் கூட முடிக்கவில்லை என்பதை வேதனைக்குரிய விஷயம். இந்தப் பெண்கள் முழுமையாக உலகம் குறித்த புரிதல் இல்லாத வயதில் தாயாகியுள்ளது, அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

இந்தச் சம்பவங்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருவதைக் எடுத்துக்காட்டுவதாக அம்ய்ந்திருக்கிறது.
கடந்த 9 மாதங்களில் (ஜனவரி 2025 முதல் செப்டம்பர் 2025 வரை) வேலூர் மாவட்டத்தில் மட்டும் 201 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் 10 மாத காலகட்டத்தில், வேலூர் மாவட்டத்தில் 59 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளதாகச் சமூக நலத்துறை அதிகாரிகள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த 59 திருமணங்களில் வெறும் 8 திருமணங்கள் மட்டுமே அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள சம்பவங்கள் குறித்து 51 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
"குறிப்பாக, வேலூர் மாவட்டத்தின் மலைப்பகுதியான அணைக்கட்டு வட்டத்தில் மட்டும் 92 டீன் ஏஜ் பிரசவங்கள் நடந்துள்ளதாகவும், அப்பகுதிகளில் குழந்தை திருமணங்கள் அதிகமாக நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டன.
அந்த அளவுக்கு அதிகாரிகளின் செயல்பாடு இருக்கிறது. தற்போது கூட மேற்படி கூட்டத்தில் சொற்ப அளவில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்".
இருந்த போதும் அவர்கள் இஷ்டம் போல் பேசிக்கொண்டு பொழுதை கழித்தனர்

admin
