பால் உற்பத்திக் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு!சுட்டிக்காட்டியவர் பணியிடைநீக்கம்!

பால் உற்பத்திக் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு!சுட்டிக்காட்டியவர் பணியிடைநீக்கம்!

 கு.அசோக்,

 ஜோலார்பேட்டை அருகே பால் உற்பத்திக் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு நடைபெறுவதாகக் கூறி உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 300க்கும் மேற்பட்ட சாலை மறியல்!

  திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காவிரிபட்டு பகுதியில் பல ஆண்டுகளாக பால் உற்பத்தியாளர்  கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது.

  கூட்டுறவு சங்கத்தில் தலைவர் கோபு செயலாளராகவும், ஆஞ்சி மற்றும் 9 இயக்குனர்கள் மேலும் உதவியாளர் விஜயகுமார் என பணிபுரிந்து வருகின்றனர்.

   இதனைத் தொடர்ந்து தலைவர் கோபு மற்றும் செயலாளர் ஆஞ்சி இருவரும் இணைந்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளனர்.இவர்கள் செய்த முறைகேட்டை உதவியாளர் விஜயகுமார் அரசுக்கும் பொதுமக்களுக்கும் கூறி வந்ததாக தெரிகிறது.

  இதனால் ஆத்திரமடைந்த தலைவர் மற்றும் செயலாளர் இவரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

   இருப்பினும் மாவட்ட நிர்வாகத்திடம் நடந்தவற்றை கூறி விஜயகுமார் பணியில் சேர உத்தரவு வாங்கி வந்துள்ளார்.

  இருப்பினும் இவரை சில மாதங்களாக பணியில் சேர்க்காமல் கோபு மற்றும் ஆஞ்சி அலைக்கழித்து வந்ததாக தெரிகிறது.

 அதன்காரணமாக தற்போது உள்ள பால் உற்பத்தி கூட்டுறவு சங்க ஆட்களை புதிதாக மாற்றக் கோரியும் உதவியாளர் விஜயகுமாரை உடனடியாக கூட்டுறவு சங்கத்தில் சேர்க்கக் கோரி உற்பத்தியாளர்கள் மற்றும் 300க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து  சாலை மறியலில் ஈடுபட்டனர்.

   சம்பவம் அறிந்து வந்த ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக சமரசம் செய்ததின் பெயரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

  இதனால் சுமார் ஒரு மணி நேரம் சாலை போக்குவரத்து தடைபட்டது.