ஓட்டை ஒடிசலாக காணப்படும் அரசு பள்ளிக்கூடம்!
கு.அசோக்,
குடியாத்தம் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வகுப்பறைக்குள் மழை நீர் ஒழுகுவதால் மாணவர்கள் அவதி - கட்டிடத்தை சீரமைத்து தர பெற்றோர்கள் கோரிக்கை.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த அக்ராவரம் அருகே உள்ள ஏரிப்பட்டரை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஏரிப்பட்டரை, பூங்குளம், உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
தொடர் மழையின் காரணமாக இன்று பள்ளிக்கு வந்த மாணவர்கள் வகுப்பறையில் அமர முடியாமல் தவித்து வருகின்றனர்.
வகுப்பறைக்குள் மழை தண்ணீர் மேல்கூரைலிருந்து ஒழுகுவதால் வகுப்பறை முழுவதும் ஈரப்பதத்துடன் இருப்பதால் பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் மற்றும் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என்கின்றனர் பெற்றோர்கள்.
இதனால் மாணவர்கள் வகுப்பறையில் அங்கும் இங்குமாக அமரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கிராமத்தை சுற்றி விவசாயிகள்,கூலி தொழிலாளர்களும் அதிகம் உள்ளதால் அரசுப் பள்ளியை நம்பியே பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர்.
ஆனால் அரசு பள்ளி கட்டிடம் இது போன்ற நிலையில் உள்ளதால் மிகவும் வேதனை அளிக்கிறது என்கின்றனர். பெற்றோர்கள் பள்ளி கட்டிடத்தை உடனடியாக சீரமைத்து தர தலைமை ஆசிரியருக்கும் அதிகாரிகளுக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.

admin
