குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் அதிகரிக்க விழிப்புணவே காரணம்! எஸ்.பி.மயில்வாகனன் பேச்சு!

குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் அதிகரிக்க விழிப்புணவே காரணம்! எஸ்.பி.மயில்வாகனன் பேச்சு!

ஜி.கே.சேகரன்,

  குழந்தைகளுக்கு எதிரான உடலியல் மற்றும் உளவியல் குற்றங்கள் குறித்த வழக்குகள் அதிகரிக்க காரணம் பெற்றோர்கள் பொதுமக்களும் தான். அவர்கள் சட்டம் குறித்து விழிப்புணர்வு பெற்றுள்ளனர் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில் வாகனன் குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு கூட்டத்தில் பேச்சு

வேலூர்மாவட்டம்,சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு நலன் குறித்த கூட்டம் குழந்தைகள் பாதுகாப்பு  ஆணைய தலைவர் விஜயா தலைமையில் நடைபெற்றது.

   இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில் வாகனன் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

   இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில் வாகனன் பேசுகையில் குழந்தைகளுக்கு எதிரான சட்ட விரோத செயல்கள் உடலியல் அல்லது உளவியல் போன்ற எந்த விதமான விஷயங்களாக இருந்தாலும் காவல்துறை உரிய சட்டத்தினை பின் பற்றி கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்,

  கடந்த மூன்றாண்டுகளில் குழந்தைகள் கொடுமைகளுக்கு எதிரான வழக்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெற்றோர்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணம்.

  சிறிய குற்றங்கள் என நினைத்த சூழல் மாறிவிட்டது.

  மக்கள் ஆசிரியர் சமூக பொறுப்புள்ள அனைவருக்கும் குழந்தைகள் பாதுகாப்பு என்பதை உறுதி செய்து வருகின்றனா என்று பேசினார்.