ஓசூரில் கட்டுமானப் பணி நடந்தபோது கான்கிரீட் அமைப்பு சரிந்து 3 தொழிலாளர்கள் பலி

ஓசூரில் கட்டுமானப் பணி நடந்தபோது கான்கிரீட் அமைப்பு சரிந்து 3 தொழிலாளர்கள் பலி

செய்தி: வை. கதிரவன்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வேடர்பள்ளி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் நுழைவுவாயில் அமைக்கும் பணி நடைபெற்றபோது, கான்கிரீட் ஆர்ச் திடீரென சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; மேலும் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக உள்ளனவா என்பது மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது. கட்டிட அனுமதி, கட்டுமானத் தரம், பணியிடப் பாதுகாப்பு உள்ளிட்ட விதிமுறைகள் பின்பற்றப்படாவிட்டால், பொதுமக்களுக்கும் அங்கு பணிபுரியும் கூலித் தொழிலாளர்களுக்கும் பெரும் ஆபத்து ஏற்படலாம்.

அனுமதி மற்றும் பாதுகாப்பு விதிகளை மீறிக் கட்டப்படும் கட்டிடங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் உரிய ஆய்வுகளும் நடவடிக்கைகளும் அவசியம்.