சாந்தி போட்ட அதிரடி டீல்**ஜெம் வீரமணி வழக்கில் அடுத்த அதிரடி! பல்கலைக்கழக வட்டாரங்களும் விசாரணை வளையத்திற்குள் வருமா? !
செய்தி: ம.பா. கெஜராஜ்,
‘ஜெம்’ கிரானைட்ஸ் தொழிலதிபர் வீரமணி மீதான போக்சோ வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரின் விசாரணை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஜெம் கிரானைட்ஸ் அலுவலகம் மற்றும் ஆர்.கே. சாலையில் உள்ள அவரது வீட்டில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
ஏற்கெனவே வீரமணியின் நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் மீது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 23 ஆண்டுகள் அவரிடம் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்ததாகக் கூறப்படும் வீடியோ, அது எவ்வாறு அவரிடம் வந்தது, போலீஸாரிடம் ஏன் தெரிவிக்கப்படவில்லை என்பது உள்ளிட்ட கேள்விகளும் விசாரணையில் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், வீரமணியுடன் நீண்ட காலமாக நெருங்கிப் பழகியதாகக் கூறப்படும் தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோரின் தொடர்புகள் குறித்தும் போலீஸார் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டிய நேரம் இது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
குறிப்பாக தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் உரிமையாளர்கள் அல்லது நிர்வாகிகளுடன் வீரமணிக்கு இருந்ததாகக் கூறப்படும் தொடர்புகள் வெறும் சமூக நட்பு என்ற அளவில் மட்டும் பார்க்கப்படுமா? அல்லது அந்தத் தொடர்புகளின் பின்னணியும் விசாரணைக்கு உட்படுத்தப்படுமா? என்ற கேள்வி தற்போது எழுகிறது.
இதேநேரத்தில், வீரமணி தொடர்பான செய்தி ஒரு யூடியூபில் ஒளிபரப்பானபோது, சென்னையை ஒட்டியுள்ள ஒரு மாவட்டத்தில் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் நடத்தி வரும் உரிமையாளர் ஒருவருடன் வீரமணி இருப்பது போன்ற காட்சியும் இடம்பெற்றதாக பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்தக் காட்சி பலரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், அந்தப் பல்கலைக்கழகத்துக்கும் வீரமணிக்கும் இடையே ஏதேனும் அதிகாரப்பூர்வமான அல்லது தனிப்பட்ட தொடர்பு இருந்ததா? அந்தத் தொடர்பு இந்த வழக்கின் விசாரணைக்கு ஏதேனும் பொருத்தம் உள்ளதா? எழுந்துள்ளன.
ஒருவருடன் புகைப்படம் இருப்பது அல்லது நட்பு வைத்திருப்பது மட்டுமே எந்தக் குற்றத்திற்கும் ஆதாரமாகாது.
ஆனால் வீரமணி வழக்கின் விசாரணை தற்போது அவரது நெருங்கிய வட்டாரம், உதவியாளர்கள், நிதிப் பரிமாற்றங்கள் மற்றும் வழக்கை பாதிக்க முயற்சிகள் இருந்தனவா என்பது வரை விரிவடைந்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவருடன் நெருக்கமாக இருந்த முக்கிய நபர்களின் தொடர்புகளையும் ஆதாரங்களின் அடிப்படையில் சரிபார்ப்பதில் தவறில்லை என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும், வீரமணி தொடர்பான வழக்கில் ஏற்கெனவே புகார் அளிக்கப்பட்ட பின்னர் விசாரணை எவ்வாறு நடைபெற்றது, வழக்கை முடிக்க முயற்சி நடந்ததா, அந்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் யார் இருந்தார்கள், பணப் பரிமாற்றங்கள் ஏதேனும் நடைபெற்றனவா என்பது உள்ளிட்ட பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்படியிருக்கும்போது, அரசியல் சந்திப்புகள், சமூக நட்புகள், தொழில் தொடர்புகள், கல்வி விற்பன்னர்கள் அல்லது செல்வாக்கு வாய்ந்தவர்களுடனான உறவுகள் ஆகியவற்றை மட்டும் வைத்து யாரும் விசாரணையிலிருந்து விலகிச் செல்லும் நிலை உருவாகக்கூடாது என்பதே சட்டத்தை மதிக்கும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த வழக்கில் குற்றம் செய்தவர்கள் மட்டுமின்றி, குற்றம் தொடர்பான தகவல்களை மறைத்தவர்கள், ஆதாரங்களை வைத்திருந்தும் அதிகாரிகளிடம் தெரிவிக்காதவர்கள், விசாரணையைத் திசைதிருப்ப முயன்றவர்கள் அல்லது சட்டவிரோதமாக வழக்கை பாதிக்க முயன்றவர்கள் என யாருடைய பங்கு ஆதாரங்களால் தெரிய வந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
முதல்வர் விஜய், இந்த வழக்கில் புகார்களை தாமதப்படுத்தியோ மறைத்தோ செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும், இதற்காக மூத்த காவல் அதிகாரி தலைமையில் விசாரணை நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், வீரமணி வழக்கு தற்போது ஒரே நபரைப் பற்றிய விசாரணையாக இல்லாமல், அவரைச் சுற்றியிருந்த தொடர்புகள், பணப் பரிமாற்றங்கள், ஆதாரங்கள் மறைக்கப்பட்டனவா, புகார்கள் தடுக்கப்பட்டனவா, செல்வாக்கு பயன்படுத்தப்பட்டதா என்பதையும் கண்டறியும் வகையில் விரிவடையும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், எந்த ஒரு தனிநபரின் புகழ், பதவி, அரசியல் தொடர்பு, தொழில் செல்வாக்கு அல்லது கல்வி நிறுவனத்தின் அந்தஸ்து ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல், ஆதாரம் எங்கு செல்கிறது என்பதை நோக்கி விசாரணை செல்ல வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ், ஐ.பி.எஸ். அவர்களின் மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வீரமணியுடன் தொடர்புடைய செல்வாக்கு மிக்க நபர்களாக இருந்தாலும் ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணைக்கு உட்படுத்துவதில் காவல்துறை உறுதியாக இருக்கும் என நம்பப்படுகிறது.
முக்கிய குறிப்பு: காங்கிரஸ் கட்சியின் மாநில அளவிலுள்ள ஒரு தலைவரிடம் வீரமணியுடன் இருந்த சாந்தி கட்டப்பஞ்சாயத்து நடத்தி 12 கோடி ரூபாவை அபகரிக்க திட்டமிட்ட நிலையில் அதற்கு ஒத்துவராக அந்த காங்கிரஸ் கட்சி தலைவர் 7 கோடி ரூபாய் வாங்கி தருகிறேன் எனக்கு இரணடு கோடி கொடுத்து விடுங்கள் என்று பேரம் பேசியிருக்கிறார்.
அதற்கு ஒத்து வராத சாந்தி உன்னுடைய கட்டப் பஞ்சாயத்து வேண்டாம் என்று ஒதுங்கிக் கொண்டாராம். இதே போல் தென் மாநிலத்தை மையப்படுத்தி கட்சி நடத்தி வரும் ஒரு தலைவரும் வீரமணியை சகட்டுமேனிக்கு மிரட்டி பணம் கேட்டதாக தகவல.
ஊடகங்களுக்கு இந்த செய்திகள் தெரியும் நிலையில் போலீசுக்கு தெரியாமல் இருக்குமா அவர்கள் என்ன விட்டு விட மாட்டார்கள் அல்லவா?

admin
