ஜெம் வீரமணி வழக்கில் விசாரணை வேகம்! சாந்தி–மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள் போலீஸ் காவல்!
செய்தி: ம.பா.கெஜராஜ,
ஜெம் கிரானைட் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கில் விசாரணை மேலும் தீவிரமடைந்துள்ளது. கைது செய்யப்பட்ட சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹனை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் காவல்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
எவீரமணி தொடர்பான வழக்கில் மேலும் ஆதாரங்களை திரட்டும் நடவடிக்கையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக சிறுமிகள் தொடர்பானதாக கூறப்படும் ஆபாச வீடியோ மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் ஏற்கனவே வீரமணி மற்றும் அவருக்கு நெருக்கமாக இருந்ததாக கூறப்படும் சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹனிடம் நடைபெறும் 3 நாள் விசாரணை வழக்கின் அடுத்த கட்ட நகர்வுகளில் முக்கியத்துவம் பெறுகிறது.
வழக்கின் விசாரணை தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? புதிய ஆதாரங்கள் ஏதேனும் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
நீதிமன்ற அனுமதியுடன் நடைபெறும் இந்த விசாரணையின் முடிவில் வெளியாகும் தகவல்கள் வழக்கின் போக்கில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்

admin
