அருண் IPS கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு தூக்கி அடிக்கப்பட்டார்! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை

அருண் IPS கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு தூக்கி அடிக்கப்பட்டார்! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை

செய்தி: ம.பா.கெஜராஜ்,

ஜெம் வீரமணி தொடர்பான விவகாரம் தமிழக அரசியல் மற்றும் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் IPS கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு தூக்கி அடிக்கப்பட்டுள்ளார்.புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.

அருண் IPS, சென்னை மாநகர காவல் ஆணையராக பணியாற்றிய காலகட்டத்தில்தான் ஜெம் வீரமணி தொடர்பான புகார் அளிக்கப்பட்டதாக ரஞ்சன் குமார் கூறியிருந்தார்.

தற்போது அவர் போலீஸ் அகாடமி இயக்குநராக பணியாற்றி வந்த நிலையில், திடீரென காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதனுடன் கோவை மண்டல ஐஜி கண்ணனும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஜெம் வீரமணி விவகாரம் தொடர்பான விசாரணை வேகமெடுத்து வரும் நேரத்தில், முன்னாள் சென்னை காவல் ஆணையர் ஒருவர் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருப்பது காவல்துறை வட்டாரத்தில் கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படும் காலகட்டம், அப்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பங்கு உள்ளிட்ட அம்சங்கள் இனி விசாரணையின் கவனத்திற்கு வருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த நடவடிக்கைக்கான முழுமையான காரணம் குறித்து தமிழக அரசு தரப்பில் விரிவான விளக்கம் வெளியாகாத நிலையில், அருண் IPS-ன் பணிமாற்றம் வீரமணி வழக்கின் பின்னணியில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் விளக்கமும் அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடும் வெளியாகும் பட்சத்தில் அவற்றுக்கும் LiveLook உரிய முக்கியத்துவம் அளிக்கும்.