சிறுமிகளை சீரழித்த பணக்கார கிழவனை காப்பாற்ற முயன்றாரா பெண் போலீஸ் அதிகாரி? அழுத்தம் கொடுத்தது யார்?ரகசிய டைரியால் பரபரப்பு!
செய்தி: ம.பா.கெஜராஜ்,
சென்னை:
சிறுமிகள் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் தொழிலதிபர் ஆர். வீரமணிக்கு சாதகமாக காவல்துறை செயல்பட்டதா என்ற கேள்வியை எழுப்பும் வகையில், கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட காவல்துறையின் இறுதி அறிக்கை தற்போது மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளது.
வீரமணி மீதான போக்சோ வழக்கில், அப்போதைய வைஸ் ஸ்குவாட் பிரிவைச் சேர்ந்த உதவி ஆணையர் யாஸ்மின், சிறுமியை அடையாளம் காண முடியவில்லை என்றும், வழக்கைத் தொடர போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் குறிப்பிட்டு “மேல் நடவடிக்கை கைவிடப்படுகிறது” (Further Action Dropped) என்ற அறிக்கையை 2026 பிப்ரவரி 19-ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்போது ஆட்சியாளர்கள் கொடுத்த அழுத்தத்தின் பேரில் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட அந்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்காததால் வழக்கு முடிவுக்கு வராமல் தொடர்ந்து நிலுவையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம், வழக்கை ஆரம்பத்திலேயே முடித்துவிட முயற்சி செய்யப்பட்டதா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் தலைமையிலான காவல்துறை இந்த விவகாரத்தை மீண்டும் தீவிரமாக எடுத்துக் கொண்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் விரைவான நடவடிக்கை எடுப்பது தனது முன்னுரிமை என அமல்ராஜ் பொறுப்பேற்றபோது தெரிவித்திருந்தார்.
லஞ்சப் பணம் தொடர்பான குற்றச்சாட்டு விசாரிக்கப்படுமா?
இதற்கிடையே, வீரமணியின் டைரியில் இந்த விவகாரம் தொடர்பாக ரூ.70 கோடி வரை லஞ்சப் பணம் கொடுக்கப்பட்டதாக பதிவுகள் இருப்பதாக கூறப்படும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பதிவு உண்மையானதா? அதில் குறிப்பிடப்பட்டுள்ள பணம் யாரிடம் சென்றது? யார் பெற்றார்கள்? யாருக்காக வழங்கப்பட்டது? அந்தப் பணப் பரிமாற்றங்களுக்கு ஆதாரங்கள் உள்ளனவா? என்பது உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு உண்மை என விசாரணையில் நிரூபிக்கப்பட்டால், பணம் பெற்றதாகக் கூறப்படும் நபர்களின் சொத்து மற்றும் நிதிப் பரிவர்த்தனைகளையும் அரசு சட்டப்படி ஆய்வு செய்து, சட்டவிரோதமாகப் பெறப்பட்ட பணம் அல்லது சொத்துக்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அவற்றை பறிமுதல் செய்வது உள்ளிட்ட உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டிய காவல்துறையிலேயே, வழக்கை முடிக்க முயற்சி நடந்ததாகக் கூறப்படும் சூழல் உண்மையா என்பதும், அப்படி நடந்திருந்தால் அதற்குப் பின்னால் யார் இருந்தார்கள் என்பதும் வெளிச்சத்திற்கு வர வேண்டும்.
ஆட்சி முடிகிறதா உருவாயில் முந்தைய அரசாங்கம் இவ்வளவு பெரிய தில்லாலங்கடி வேலையை செய்திருப்பது அருவருக்கத்தக்கதாகும். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு வழக்கை முடிப்பதற்காக அதிகாரப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தால், அந்த அறிக்கையின் பின்னணி, விசாரணையின் தரம், சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் வழக்கை முடிக்க பரிந்துரைத்த அதிகாரிகளின் நடவடிக்கைகள் அனைத்தும் முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.
குறிப்பாக, நீதிமன்றம் அந்த அறிக்கையை ஏற்காத நிலையில், வழக்கை மீண்டும் தூசு தட்டி விசாரணை நடத்தும் தற்போதைய நடவடிக்கை, இதுவரை நடைபெற்ற விசாரணையில் ஏதேனும் குறைபாடுகள் இருந்ததா என்பதையும் வெளிப்படுத்த வேண்டும்.
வீரமணியிடம் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையா என்பதை அரசு விசாரிக்க வேண்டும். உண்மை வெளிவந்தால், பணம் பெற்றவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

admin
