பானி பூரி வியாபாரி மற்றும் அதிமுக ஒ.செ.விடம் பணம் பறிமுதல்!

ஜி.குலசேகரன்,

  பானி பூரி வியாபாரி உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த 1.50 லட்சம் பணம் மற்றும் 21 கிராம் தங்க நகையை  பறிமுதல் செய்த பறக்கும் படையினர்.

   2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற  தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது அதன் காரணமாக ஏதேனும் பணக்கடத்தல் சம்பவம் நடைபெறுகிறதா என பறக்கும் படையினர் ஆங்காங்கே வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இந்த நிலையில் பெருமைப்பட்டு பகுதியை சேர்ந்த லட்சுமணன் (45), இவர் திருச்சியில் பானிபூரி வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது நகைகளை திருப்பத்தூர் இந்தியன் வங்கியில் வைத்துள்ளார் அதனை மீட்பதற்காக திருச்சியில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு திருப்பத்தூருக்கு வந்தார்.

   அப்போது காரப்பட்டு பகுதியில் வந்து கொண்டிருந்த போது அங்கு ரோந்து பணியில் இருந்த பறக்கும் படையினர் லட்சுமணன் வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

 அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் ஒன்றரை லட்சம் பணம் மற்றும் 21 கிராம் தங்க நகையை எடுத்து வந்தது தெரிய வந்தது.

   அதனை பறிமுதல் செய்து சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்த அலுவலர் மற்றும் வருவாய் கோட்ட ஆட்சியர் வரதராஜன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

   இதன் பின்பு அதிகாரிகள் அந்த பணத்தை கருவூலத்திலும் ஒப்படைக்கப்பட்டது.

 இராணிப்பேட்டைமாவட்டம்

சோளிங்கர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாணாவரம் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்று எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 95 ஆயிரம் பறக்கும் படையினரால் பறிமுதல்

  சோளிங்கர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாணாவரம் மேம்பாலம் அருகே தேர்தல் பறக்கும் படை குழு அலுவலர் ஜெய்கிசான்  தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த  காரை சோதனை மேற்கொண்ட போது அதில் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூபாய் 95 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு சோளிங்கர் வட்டாட்சியரும் தேர்தல் அலுவலருமான செல்வியிடம் ஒப்படைக்கப்பட்டது.

   மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்ட போது, பாணாவரம் பகுதியில் செயல்பட்டு வரும் மின்சார பொருட்கள் விற்பனை கடைக்கு சொந்தமான தொகை என்றும், வங்கியில் வரைவு வைக்க கொண்டு செல்லும் போது தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிய வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டம்,

ஆம்பூர் அருகே அதிமுக ஒன்றிய செயலாளரிடம், ஆவணமின்றி கொண்டுச்செல்லப்பட்ட 1 லட்சம் ரூபாய் பறிமுதல்.

  திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுப்பட்டு வரும் நிலையில், ஆம்பூர் அடுத்த மாதனூர் - ஒடுகத்தூர் சாலையில், உள்ள கடலைக்குளம் பகுதியில் ஆம்பூர் (48) சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் கார்த்தி தலைமையிலான பறக்கும் படையினர், தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனா.

அப்பொழுது அவ்வழியாக வந்த மாதனூர் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர், ஜோதி ராமலிங்க ராஜாவின் காரை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்த போது அதில், உரிய ஆவணங்கள் இன்றி 1 லட்சம் ரூபாய் கொண்டுச்செல்லப்பட்டது தெரியவந்துள்ளது. உடனடியாக அவற்றை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள், அப்பணத்தை, ஆம்பூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் உள்ள ஆம்பூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் பூஷ்ணகுமாரிடம் ஒப்படைத்தனர்.