மன்டேபெட்டிஷன் - விவசாய குறை தீர்வு கூட்டம் ரத்து! திருப்பத்தூர் வேலூர் இராணிப்பேட்டை ஆட்சியர்கள் பேட்டி!
கு.அசோக்,,
இராணிப்பேட்டையில் தேர்தல் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து அனைத்து கட்சி கூட்டமானது நடைபெற்றது. இதில் திமுக,அதிமுக,பாமக,கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்திற்கு பின்னர் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கூறுகையில் இராணிப்பேட்டை,ஆற்காடு,அரக்கோணம்,சோளிங்கர் 4 தொகுதிகள் உள்ளது இறுதி வாக்காளர் பட்டியல் ஏற்கனவே வெளியிட்டுவிட்டோம்.
9,44,701 பேர் வாக்காளர்களாக உள்ளனர் ஆண்கள் 461213 ,பெண்கள் 483377,மூன்றாம் பாலினம் 111 பேர் உள்ளனர் வாக்குபதிவு மையங்கள் 1247 உள்ளது 632 இடங்களில் அமைந்துள்ளது.
மார்ச் 30 முதல் வேட்பு மனுதாக்கல் செய்யலாம் சுவிதா ஆப் மூலம் எதாவது அரசியல் கட்சிகள் அனுமதி பெற அதில் விண்ணப்பித்து பெறலாம் வாக்குபதிவை அதிகரிக்க வாக்காளர்கள் விழிப்புணர்வு செய்து வருகிறோம் என சொன்னார்.
தேர்தல் நடைமுறையை ஒட்டி பொதுமக்கள் 50 ஆயிரத்திற்கு உள்ளாக பணம் மட்டும் எடுத்துச் செல்ல வேண்டும் எனக்கும் அதே ரூல் தான் கலெக்டர் பேட்டி
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ¢ சிவசௌந்தரவல்லி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தா£.
¢ அப்போது இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 தொடர்பான தேர்தல் அட்டவணையை தெரிவித்தார்.
அதன் பின்னர் திருப்பத்தூர் மாவட்டத்தில் நான்கு தொகுதிகளின் வாக்கு சாவடி எண்ணிக்கை 1202 எனவும் வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கை 541 எனவும் அதேபோல மாவட்டத்தின் மொத்த ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 449464 மேலும் பெண் வாக்காளர் எண்ணிக்கை 461996 மூன்றாம் பாலினத்தவர் 139 என மொத்தம் 911599 ஆகும் எனவும்,
திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் நடைமுறையையொட்டி பொதுமக்கள் மட்டுமன்றி எம்எல்ஏ, அரசியல் கட்சி பிரமுகர்கள் ரொக்கப்பணம் 50 ஆயிரத்துக்குள்ளாக பணம் மட்டுமே எடுத்து செல்ல வேண்டும்.
மேலும் எனக்கும் அதே ரூல் தான் அனுமதி மீறினால் பாராபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெறும் வாரந்தோறும் நடைப்பெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் தமிழக சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் தொடங்கப்படும்.
பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் தங்களுடைய மனுக்களை போடலாம் எனவும் தெரிவித்தார்.
அதே போல விவசாயிகளுக்கான குறை தீர்வு நாள் தேர்தல் நடைமுறை இருக்கும் வரை கூட்டம் ரத்து.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உரிய அனுமதி பெற்று வைத்திருக்கும் துப்பாக்கிகளை அந்தந்த காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிவசௌவுந்தரவல்லி தெரிவித்தார்.
வேலூர்,
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள்நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதைதொடர்ந்து அரசியல் கட்சியினர் மற்றும்பொதுமக்கள் அனைவரும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை முழுமையாகபின்பற்றி தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்திட முழு ஒத்துழைப்பைவழங்க வேண்டுமென மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி, செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் அரசியல் கட்சியினர் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.
பின்னர் வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி 2026 தேர்தல் நடத்தைவிதிமுறைகள் குறித்து செய்தியாளர்களிடம் எடுத்துரைத்தார்.
செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.
இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்அறிக்கை 15.03.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளதால் வேலூர் மாவட்டத்தில்நேற்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026தமிழ்நாட்டில் வருகின்ற 23.04.2026 அன்று ஒரே கட்டமாக நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள்முழுமையாக 15.03.2026 அன்று முதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 குறித்ததேர்தல் அறிவிப்பினை கீழ்க்கண்டவாறு அறிவித்துள்ளது.அறிவிப்பாணை வெளியிடும்,

நாள் 30.03.2026வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் 30.03.2026வேட்பு மனு தாக்கல் செய்ய இறுவேலூர் மாவட்டத்தில் 23.02.2026 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர்பட்டியலின்படி 5,49,654 ஆண் வாக்காளர்களும், 5,83,769 பெண்வாக்காளர்களும், 164 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 11,33,587வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த வாக்காளர்கள் வாக்களிக்க 676 அமைவிடங்களில் 1427வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 1427 வாக்குச்சாவடி மையங்களில்வாக்குப்பதிவு தினத்தன்று பயன்படுத்துவதற்காக 1712 மின்னணு வாக்குப்பதிவு
இயந்திரங்கள் (கூடுதலாக 20 சதவீதம்), 1712 கட்டுப்பாட்டு கருவிகள் (கூடுதலாக20 சதவீதம்), 1855 விவிபேட்இயந்திரங்களுக்கு (கூடுதலாக 30 சதவீதம்)முதல்நிலை சரிபார்ப்பு பணி முடிக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளன.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து, மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்த அனைத்துதுறை அலுவலர்களுடனானஆலோசனைக் கூட்டம் 15.03.2026 அன்று நடைபெற்றது.
24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட ஒரு
சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும்படை குழுக்கள் என 5 சட்டமன்றதொகுதிகளுக்கு 15 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் 24மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட ஒருசட்டமன்ற தொகுதிக்கு 3 நிலையான கண்காணிப்பு குழுக்கள் என 5 சட்டமன்றதொகுதிகளுக்கு 15 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 2 வீடியோ கண்காணிப்பு குழுஎன 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு 10 வீடியோ கண்காணிப்பு குழுக்களும் உடனடியாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் பொதுமக்கள் தேர்தல் தொடர்பானபுகார்களை தெரிவிக்கவும், பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக்குழுக்களை கண்காணிப்பதற்காக தேர்தல் கட்டுப்பாட்டு அறைஅமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களைகட்டுப்பாட்டு அறையில் 1800-425-7004 என்ற கட்டணமில்லா தொலைபேசி
எண்ணிலும், 7598498539 என்ற வாட்ஸ்ஆப் தொலைபேசி எண்ணிலும், சிவிஜில் செயலியின் மூலமாகவும் தெரிவிக்கலாம்.தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிமுறைகளின் படி, உரிய ஆவணங்களின்றிரூ.50,000/- க்கு மேற்பட்ட ரொக்கம் மற்றும் ரூ.10,000/- க்கு மேற்பட்ட பரிசுப்பொருட்களை கொண்டு செல்லக்கூடாது.
தேர்தல் பறக்கும்படை மற்றும்நிலையான கண்காணிப்புக்குழுக்களால் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்செய்யப்பட்டால் அவற்றை திரும்பபெற உரிய ஆதாரங்களுடன் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மேல்முறையீட்டு அலுவலரை அணுகி தீர்வுபெறலாம்வேலூர் மாவட்டத்தில் அரசு கட்டடங்கள் மற்றும் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ளசுவரொட்டிகள், ஓவியங்கள் மற்றும் கொடிகள் அனைத்தும் 24 மணிநேரத்திற்குள்
அகற்றப்படும்.
பொதுத்துறை கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில்ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், ஓவியங்கள் மற்றும் கொடிகள் 48மணிநேரத்திற்குள் அகற்றப்படும். தனியார் கட்டடங்கள் மற்றும் சுவர்களில் உள்ளசுவரொட்டிகள் மற்றும் ஓவியங்களை 72 மணிநேரத்திற்குள் அகற்றப்படும்.இப்பணிகளில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பணியாளர்கள் உடனடியாக ஈடுபட்டுள்ளனர்.
எனவே அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தேர்தல்நன்னடத்தை விதிமுறைகளுக்குட்பட்டு, இந்தத் தேர்தலை சுதந்திரமாகவும்நியாயமாகவும் நடத்திட முழு ஒத்துழைப்பை வழங்குமாறு வேலூர் மாவட்டதேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் .சுப்புலெட்சுமி,அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன்,கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன் உடனிருந்தனர்.

admin
