நீதிமன்ற வழிகாட்டுதல்களை சிறை அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டும்! ஆஃப்காவில் பேச்சு!

நீதிமன்ற வழிகாட்டுதல்களை சிறை அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டும்! ஆஃப்காவில் பேச்சு!

கு.அசோக்,

 சிறைவாசம் என்பதே நீதித்துறை வழங்கிய தண்டனை தான் - சிறைவாசிகளை நல்வழிபடுத்த வேண்டும் சிறை அதிகாரிகள் அவர்களை மன அழுத்தத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டும் புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்களை பின்பற்ற வேண்டும் - கர்நாடக சிறைத்துறை  தலைவர்  தயானந்த் பேச்சு.

 வேலூர்மாவட்டம்,தொரப்பாடியில் உள்ள சிறை சீர்திருத்த நிர்வாக பயிலகத்தில் நேற்று சிறை நிர்வாகம் மற்றும் குற்றவியல் சட்டங்கள் குறித்த 5 நாட்கள் பயிற்சி துவக்க விழாவானது நடைபெற்றது.

 சிறை சீர் திருத்த நிர்வாக பயிலகத்தின் இயக்குநர் பிரதீப் தலைமையில் நஐபெற்றதில்கர்நாடகா,.ஆந்திரா.கேரளா,தமிழ்நாடு,பாண்டிசேரி.,அந்தமான்   உள்ளிட்ட மாநிலங்களின் சிறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

 சிறப்பு அழைப்பாளராக கர்நாடக சிறைத்துறை தலைவர் தயானந்த் பயிற்சியினை துவங்கி வைத்து பேசுகையில் சிறைவாசம் என்பதே ஒரு தனடனை தான் அதனை நீதித்துறை வழக்குகிறது.

  அப்போது அவர்கள் குற்றத்தை எண்ணியும் சிறைவாசத்தை எண்ணியும் மன அழுத்தம் ஏற்படும் அவர்களை மன அழுத்ததிலிருந்து மீட்பதுடன் சிறை அதிகாரிகளாகிய நீங்களும் மன அழுத்தமில்லாமல் இருக்க வேண்டும்.

   புதிய குற்றவியல் சட்டங்களையும் நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும், மேலும் நீதிமன்றங்கள் அறிவுறுத்துவதையும் நீதிமன்ற வழிகாட்டுதல்களையும் கடைபிடிக்க வேண்டும். சிறைவாசிகளை சீர் திருத்த வேண்டுமென பேசினார் இவ்விழாவில் சிறை சீர் திருத்த நிர்வாக பயிலகத்தின் இணை இயக்குநர் கோவிந்தராஜன் ,மற்றும் ஒருங்கிணைப்பாளர் ப்யூலா இம்மானுவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.